Rajinikanth: புதிய, பழைய கட்சிகளுக்கு சவால் விடுக்கிறார் ஸ்டாலின்.. இளையராஜா விழாவில் ரஜினிகாந்த் ‘பஞ்ச்’

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைஞானி இளையராஜா பாராட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth), அதிசய மனிதர் என்றால் அது இளையராஜா தான்.. என் கண்ணால் பார்த்த அதிசயம் இளையராஜா சார்.. உகல மக்களின் நாடி, நரம்பு, ரத்தத்தில் அவரது பாடல்கள் உறைந்துள்ளது என்று புகழாரம் சூட்டினார். இளையராஜாவை சாமி என்று தான் அழைப்பதாகவும் ரஜினிகாந்த் பேசினார். மேலும் பழைய கட்சிகளுக்கும், புதிய கட்சிகளுக்கும் சவால் விடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்றும் பேசினார்.

இசைஞானி இளையராஜா பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:- அதிசய மனிதர் என்றால் அது இளையராஜா தான்.. என் கண்ணால் பார்த்த அதிசயம் இளையராஜா சார்.. அனைத்து மக்களின் நாடி, நரம்பு, ரத்தத்தில் அவரது பாடல்கள் உறைந்துள்ளது. கூலி படத்தில் கூட அவரது பாடல்களை பயன்படுத்தினோம்.

stalin-is-challenging-both-new-and-old-parties-says-rajinikanth-at-ilaiyaraaja-event

இசையஞானியாக அவர எல்லாருக்கும் தெரியும். 50 ஆண்டுகளாக இசையமைத்து வருகிறார். 1500 பாடல்கள்.. எப்பேற்பட்ட சாதனை.. ராகங்களை அள்ளிக்கொடுப்பவர் இளையராஜா. புவனா ஒரு கேள்விக்குறி படத்தின் போது இளையராஜாவை பார்த்தேன்.. அப்புறம் ஒரு நாள் பார்க்கும் போது சாமி மாதிரி இருந்தார்.

முதலில் அவரை அழைத்தபோதே சாமி என்று தான் அழைத்தேன். அதற்கு பிறகு அவரை நான் சாமி என்று தான் கூப்பிடுவேன். புதிய கட்சிகளுக்கும், பழைய கட்சிகளுக்கும் சவால் விடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+