மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே உள்ள சூழலில், திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்த சூழலில் பெண் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் சுய உதவிக் குழுவிற்குப் பிணியின்றி ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லை. அனைத்து கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. மேலும், கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

எப்போதுமே தேர்தல் சமயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். இந்தச் சூழலில் தான் சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக மகளிர் வாக்காளர்களைக் கவரும் வகையிலான வாக்குறுதிகள் பல இருந்தது. மகளிருக்கான உரிமை தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், சுய உதவி குழுவிற்கு பிணியின்றி ரூ.5 லட்சம் கடன் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கு மானியமும் வழங்கப்படும் என்பதையும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிவித்தார்.
அதேபோல தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்சம் கோடியில் இருந்து 5 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்றும் ரூ.18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு 50 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் வரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications