இனிமேல் மாற்றம்.. சொத்து பத்திரத்தில் அதிரடி.. முத்திரைத்தாளை இப்படித்தான் வாங்கணுமாம்.. பதிவுத்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்து பத்திரத்திற்கான முத்திரைத்தாள் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.. இதுகுறித்து தமிழக பத்திரப்பதிவு துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஒரு பரிவர்த்தனை நடக்கும்போது அரசாங்கத்திற்கு வரியாக செல்லும் பணம் முத்திரைத்தாள் வழியாக அரசின் கருவூலத்திற்கு செல்லும்... இதைத்தான் முத்திரைத்தாள் என்று அழைக்கிறோம்.

Stamp Duty in Tamil Nadu and New Order regarding stamp paper for property deeds, by TN Registration Department

முத்திரைத்தாள் எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? குத்தகை பத்திரம், வீடு கட்டுமான ஒப்பந்தம், பத்திரம், கிரையம், தானம் மற்றும் செட்டில்மெண்ட் பத்திரங்களில் பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணங்களை மக்கள் கட்டுவார்கள். அதன் வழியாக இருவருக்கும் இடையே பணபரிமாற்றமும் நடைபெறும். இதற்குத்தான் முத்திரைத்தாள் பயன்படுகிறது.

பத்திரப்பதிவு: அதேபோல, முத்திரைத்தாள் கட்டணம் பத்திரங்களுக்கு பத்திரம் வேறுபடக்கூடியது.. பத்திரப்பதிவு செய்யும்போது முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவாளர் கட்டணம் என்று இரண்டு கட்டணமும் பத்திரம் பதிவு செய்பவர் கட்ட வேண்டும்.

இந்நிலையில், சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை தலைமை முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.. அதன்படி, சொத்து பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்களின் முத்திரைத்தாள், வெளிநபர் பெயரில் வாங்கப்பட்டு இருக்கக்கூடாது, முகவரின் பெயர், முகவரியையும் சரிபார்க்க வேண்டும் என்று பதிவுத்துதுறை உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சொத்து பரிமாற்றம்: "பதிவுக்கு வரும் ஆவணங்களில், சொத்து பரிமாற்றம் தொடர்பான விபரங்களை சரிபார்ப்பதில், கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இத்துடன் முத்திரைத்தாள் தொடர்பான விஷயங்களிலும் சார் - பதிவாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.. முத்திரைத்தாள் யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.

சொத்தை எழுதி கொடுப்பவர் வாங்குபவரில் ஒருவர் பெயரில் மட்டுமே முத்திரைத்தாள் வாங்க வேண்டும் விற்பவர், வாங்குபவர் தவிர்த்து, வேறு பெயர்களில் வாங்கப்பட்ட முத்திரைத்தாளில் எழுதப்பட்ட பத்திரங்களை பதிவுக்கு ஏற்கக்கூடாது. முத்திரைத்தாளில் அதை விற்கும் முகவர் குறித்த விபரங்கள் முறையாக இடம்பெற வேண்டும்.. அவற்றில் திருத்தங்கள் இருக்கக் கூடாது. இந்த விபரங்கள், சார் - பதிவாளருக்கு புரியும் வகையில் இருக்க வேண்டும்..

அதிரடி உத்தரவு: எந்த தேதியில் முத்திரைத் தாள் வாங்கப்பட்டதோ, அதற்கு பிந்தைய நாளில் சொத்து பரிமாற்ற நிகழ்வுகள் குறிப்பிடப்பட வேண்டும் முத்திரைத்தாள் விற்கப்பட்ட தேதியில் இருந்து, ஓராண்டு வரையிலான காலத்துக்குள் அதில் எழுதப்பட்ட சொத்து பரிமாற்றத்தை பதிவு செய்யலாம் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+