முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ‘வாரியம்’.. 3 எம்.எல்.ஏக்களும் நியமனம்!
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்திற்கு தலைவராக முதல்வர் ஸ்டாலினும், அலுவல் சார் உறுப்பினர்களாக 3 சட்டமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் செயலர்களும் அலுவல் சார் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில ஆலோசனை வாரியம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் குறித்த சிக்கல்களை களையும் வண்ணம் மாநில கொள்கைகளை மேம்படுத்த இந்த வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் செயலர்கள் அலுவல் சார் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2016ல் சட்டம்
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-இன் பிரிவு 66-இல், ஒவ்வொரு மாநிலத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு செயலர்கள்
மாநில அரசின் செயலாளர்களாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர், உயர்கல்வித்துறை முதன்மை அரசு செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை தலைமைச் செயலாளர், நிதித் துறை தலைமை செயலாளர், மனிதவள மேலாண்மை துறை அரசு செயலாளர், மருத்துவ மக்கள் நல்வாழ்வு துறை அரசு முதன்மை செயலாளர் என மொத்தம் 14 பேர் வாரியத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3 எம்.எல்.ஏக்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் அலுவல் சார் உறுப்பினர்களாக 3 சட்டமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனை வாரியத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், வெங்கடாசலம், ரவி ஆகியோர் அலுவல் சார் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications