Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாநில சுயாட்சியை காக்க.. முன்னாள் நீதிபதியை தலைமையாக கொண்ட குழு - முதலவர் ஸ்டாலின் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை கொண்டுவந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அநீதி இழைத்து வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வரும் சூழலில், தமிழக சட்டமன்றத்தில் ஸ்டாலின் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது தீர்மானம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது... மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று திமுக தொடர்ந்து முழங்கி வருகிறது என்று தன்னுடைய உரையில் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த மாநில உரிமைகளை திமுக விட்டுத்தராமல் போராடியும் வருகிறது. எனினும் ஆனால், அவரவர் மாநில விவகாரத்தில் மத்திய அரசு மூக்கை நுழைப்பதை விரும்பவில்லை.

State Autonomy resolution MK Stalin tamil nadu assembly

பாஜகவின் அதிரடிகள்

குறிப்பாக, நீட் விவகாரம், மொழிக் கொள்கை, நிதி பகிர்ந்தளிப்பு, பேரிடர் நிவாரணம், என மத்திய பாஜகவின் ஒவ்வொரு செயல்பாடும் திமுகவுக்கு அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் உண்டுபண்ணி விடுகிறது. அதிலும், ஆளுநர்களை வைத்து, மாநில அரசுகளை செயல்படவிடாமல் நடத்துவதையும் திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், மாநில உரிமைகளை நிலைநாட்டக் கூடிய வகையில் விரைவில் புதிய அறிவிப்பை வெளியிடுவதாக, கடந்த மார்ச் 25ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

மொழித் திணிப்பு - நிதி அநீதிகள்

"இந்த மொழி திணிப்பின் மூலமாக மாநிலங்களை, மாநில மொழிகளை, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மாநிலங்களை தங்களது கொத்தடிமை பகுதிகளாக நினைப்பதால்தான் இப்படியெல்லாம் மொழித் திணிப்புகளும், நிதி அநீதிகளையும் செய்கின்றனர். அதனால், நாட்டின் கூட்டாட்சி தன்மையை காக்கவும், மாநிலங்களின் சுயாட்சியை மீட்டெடுக்கவும் சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ்மொழியையும் காக்க முடியும், தமிழினத்தையும் உயர்த்த முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்து, அதற்கான அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவேன்" என்று தெரிவித்திருந்தார்.

இன்று தீர்மானம் தாக்கல்

5 நாள் தொடர் விடுமுறைக்கு பிறகு, இன்று தமிழக சட்டசபை மீண்டும் கூடியது.. காலை 9.30 மணிக்கு முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.. கேள்வி நேரம் முடிந்ததுமே, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மைத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

உறுப்பினர்களின் வாக்கெடுப்பு

விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வலியுறுத்தும் வகையில், மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து முன்மொழிந்து பேசினார். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது..

தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம் தாக்கல் செய்து, முதல்வர் உரை நிகழ்த்தினார். அப்போது, "மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டு மாணவர்கள் நலனை மட்டுமே முக்கியமாக கருதுகிறது திமுக அரசு.. ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாட்சி கொண்ட நாடாகதான் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள்.

உயர்மட்ட குழு

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று திமுக தொடர்ந்து முழங்கி வருகிறது. ராஜமன்னார் தலைமையில் உயர்மட்ட குழுவை மறைந்த முதலமைச்சர் கலைஞர் நிறைவேற்றினார்.. நீட் தேர்வு ஒருசாரருக்கு மட்டுமே பயன்படும்.

நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாததால், கூட்டாட்சி தத்துவத்தினை கொண்ட நெறிமுறைகளை கொண்ட ஒன்றியமாக உருவாக்கினார்கள். இந்த சூழலில் மாநில மக்களின் உரிமைகளை போராடி பெற வேண்டியதாக உள்ளது

குழு அமைத்த முதல்வர்

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கு.மே.ஜோசப் அவர்களை தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.. இதன் உறுப்பினர்களாக இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர். மு.நாகநாதன் ஆகியோர் இருப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது பேச உள்ளனர்.. இறுதியாக உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்குப் பிறகு அது நிறைவேற்றப்பட உள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+