Madhampatti Rangaraj: விடாத ஜாய் கிரிஸில்டா! மாதம்பட்டி ரங்கராஜ் நாளை ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன்!
சென்னை: தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கிவிட்டு தன்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார் என ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா புகார் கொடுத்திருந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் நாளை ஆஜராக மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளராக உள்ள ஜாய் கிரிஸில்டா என்பவர் கடந்த மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்திருந்தார்.

அந்த புகாரில், "ரங்கராஜ் என்பவர் எனது கணவர், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த இரு ஆண்டுகளாக ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தோம். ஆனால் கடந்த இரு மாதங்களாக எனது தொடர்பை அவர் முற்றிலும் துண்டித்துள்ளார்.
நான் அவரை நேரில் சந்திக்க முயன்ற போது என்னை அடித்து விரட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும்.
அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சமூகவலைதள பக்கத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகார் தொடர்பாக கடந்த மாதம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா ஆஜராகி புகைப்படங்கள், செல்போன் உரையாடல் அனைத்தையும் கொடுத்து அதிகாரிகள் கேட்ட கேள்விக்கும் மணிக்கணக்கில் விளக்கம் அளித்தார்.
அது போல் மாதம்பட்டி ரங்கராஜிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அங்கு பார்த்துக் கொள்கிறேன் என காவல் துறையினரிடம் ரங்கராஜ் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி தொடர்பாக ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பதால் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்ததாக தெரிவித்திருந்தார்.
அந்த புகாரில் , மாதம்பட்டி ரங்கராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாய் குறிப்பிட்டுள்ளார். தனது வழக்கறிஞர் சுதாவுடன் மாநில மகளிர் ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை ஜாய் அளித்துள்ளார்.
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் நாளை ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இதன் பேரில் அவர் நாளை ஆஜராகி என்ன மாதிரியான விளக்கங்களை அளிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications