"நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்.." அஜித் பேட்டி.. மனைவி ஷாலினி குறித்தும் நெகிழ்ச்சியாக பேசிய ஏகே
சென்னை: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது திங்கட்கிழமை வழங்கப்பட்டது. இதற்கிடையே விருது பெற்ற பிறகு ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டியளித்த அஜித், பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தல பட்டம் வேண்டாம் என சொன்னது முதல் தனது மனைவி ஷாலினியின் தியாகம் வரை பல விஷயங்கள் குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். கலைத் துறையில் சாதித்ததற்காக அஜித்திற்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியுள்ளது. கடந்த திங்கட்கிழமை டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதை வழங்கினார்.

அஜித்
இதற்கிடையே ஆங்கில ஊடகமான இந்தியா டுடேவுக்கு நடிகர் அஜித் பேட்டியளித்துள்ளார். அதன் ஒரு பகுதி இப்போது வெளியாகியுள்ளது. அதில் அஜித் பல முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். குறிப்பாகத் தல என்று தன்னை அழைக்க வேண்டாம் எனக் கூறியது தொடர்பாகவும் தனது மனைவி ஷாலினி தொடர்பாகவும் அஜித் கூறிய கருத்துகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் அஜித்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்ட அஜித், சரியான பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே இதுபோன்ற விருதுகள் காட்டுவதாகத் தெரிவித்தார். மேலும், இன்னுமே தனக்குப் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளதை நம்ப முடியவில்லை என்றும் கூறினார்.
அனைவருக்கும் நன்றி
தொடர்ந்து பேசிய அஜித், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இன்னுமே என்னால் நம்ப முடியவில்லை... நான் இன்னுமே மனதளவில் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவனாகவே உணர்கிறேன்.. எனவே, இங்கே இருந்து இதை (விருது பெறுவது) அனுபவிப்பது அசாதாரணமாக இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று கூறிய அவர் தனது குடும்பத்தினர், ரசிகர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொன்னார்.
அஜித் மேலும் பேசுகையில், "விருது அறிவிக்கப்பட்டபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்ற தருணங்கள் தான் உங்களை ஊக்குவிக்கும்.. அல்லது குறைந்தபட்சம் நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள் என்ற நம்பிக்கையைத் தரும்.. இத்தனை ஆண்டுகளாக நீங்கள் செய்து வருவதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தைத் தரும். நான் சரியான பாதையில் செல்வதாக உணர்கிறேன்.. இதனால் நான் என் வேலையில் கவனம் செலுத்துகிறேன்" என்றார்.
தல பட்டம் துறப்பு
தல உள்ளிட்ட பட்ட பெயர்கள் குறித்த கேள்விக்கு அவர், "எனக்கு இதுபோன்ற பட்டங்களில் நம்பிக்கை இல்லை.. என்னை அஜித் அல்லது ஏகே என்று பெயரைச் சொல்லி அழைப்பதே பிடித்திருக்கிறது.. நான் ஒரு நடிகன்.. மற்ற வேலைகளைப் போல இதுவும் ஒரு வேலை.. என் வேலைக்குச் சம்பளம் வாங்குகிறேன். எனது வேலையால் புகழும் செல்வமும் உடன் கிடைக்கிறது..
எனக்கு என் வேலை ரொம்ப பிடித்து இருக்கிறது. இதனால் தான் கடந்த 33 ஆண்டுகளாக இதை நான் செய்து வருகிறேன். நான் என் வாழ்க்கையை முடிந்தவரை எளிமையாக வைத்திருக்க முயல்கிறேன்.. அளவுக்கு அதிகமாக யோசிப்பதைத் தவிர்க்கிறேன்.. ஒரே நேரத்தில்அதிக வேலைகளைச் செய்ய மாட்டேன். இதனால் எனக்கு இதர விஷயங்களில் கவனம் செலுத்த முடிகிறது" என்றார்.
மனைவி ஷாலினி
தொடர்ந்து தனது மனைவி ஷாலினி குறித்துப் பேசிய அஜித், "நான் ஏதோ பொலிடிக்கலி கரெக்டாக என்னைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஷாலினிக்கு நன்றி சொல்லவில்லை.. அவரது பங்களிப்பு முக்கியமானது.. திருமணத்திற்கு முன்பும் ஷாலினி மிகவும் பிரபலமான நபர்தான்.. ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்படும் நபராக இருந்தார்.
ஆனால், திருமணத்திற்குப் பிறகு எனக்காகச் சினிமாவை விட்டுவிட்டு, எனது பயணத்தில் ஒவ்வொரு அடியிலும் உறுதுணையாக இருக்கிறார். ஒரு சில முறை என்னுடைய முடிவுகள் தவறான போதும் கூட, மனம் தளராமல் உறுதுணையாக இருந்துள்ளார். எனது சாதனைகளில் முழுப் பாராட்டுகளும் அவருக்குத் தான் சென்று சேர வேண்டும்" என்றார்.
-
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
முகம் முழுக்க சோகம்.. தாயார் மறைவால் துபாயில் இருந்து சென்னை வந்த அஜித்குமார் -
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications