வளர்த்த கடா மார்ப்பில் பாய்ந்தது.. சென்னை போலீஸ் கமிஷனர் ஆபிஸில் தெரு நாய்கள் செய்த சம்பவம்
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குள் ஜாலியாக வலம் வந்த தெரு நாய்கள், இன்று போலீசாரை கடித்து வைத்து எமனாக மாறத் தொடங்கியால், விரட்டி அடிக்கப்படுகின்றன. தடையின்றி ஜாலியாக உலா வந்த நாய்கள் விரட்டி அடிக்க போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் தெருநாய்கள் என்றால் பிரச்சனையாக மாறி உள்ளது. சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு சிலர் உணவளிக்கிறார்கள்.. பலர் வெறுக்கிறார்கள்.. காரணம்..தெருநாய்கள் இரவில் நடந்த வருவோருக்கும், இருசக்கர வாகனத்தில் வருவோருக்கும் எமனாக இருப்பதுதான் காரணம். சென்னையில் இரவில் தெருக்களில் பயந்து பயந்து செல்லும் அளவிற்கு தெருநாய்கள் உக்கிரமாக சுற்றுகின்றன. நள்ளிரவு வேளைகளில் வேலைமுடிந்து வருவோர், உயிரை கையில் பிடித்தபடி பைக்கில் வரவேண்டிய நிலை இருக்கிறது.

இதனிடையே அண்மையில் சென்னை ஆயிரம் விளக்கில் சிறுமியை அபாயகரமான வளர்ப்பு நாய் ஒன்று கடித்த விவகாரம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வீடுகளில் நாய் வளர்க்க அனுமதி வாங்க வேண்டும் என்றும் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அண்மையில் உத்தரவிட்டார்.
இதனிடையே தெரு நாய்களை கூட மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்று கருத்தடை செய்து அதன் விரீயத்தை குறைக்கும் செயல்களில் முன்பை விட தீவிரமாக இறங்கி உள்ளனர்,... நாய் கடியால் இறப்பு சம்பவங்கள் அதிகரிப்பதால் இந்த நடவடிக்கையை தீவிரமாக்கி உள்ளனர்..
இதனிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பல்வேறு மாடிகளில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஜாலியாக வளம் வந்தன. அவற்றிற்கு பெயர் வைத்து, உணவும் அளித்து பராமரித்து வந்த போலீசார், அவற்றை செல்லப்பிராணியாக பார்த்து வந்தனர்.
யாரும் எளிதில் செல்ல முடியாத கட்டிடங்களுக்குள் சர்வ சாதாரணமாக உலா வந்த தெருநாய்கள், தங்கள் சேட்டையை காட்டியதால் இன்று விரட்டியடிக்கப்படுகின்றன. தெருநாய்கள் ஆரம்பத்தில் போலீசார் யாரையும் கடித்தது இல்லை. ஆனால்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் முகாமிட்டிருந்த நாய்கள் சில, அங்கு காவலுக்கு நிற்கும் போலீசாரையே கடித்து வைத்துவிட்டன.இதில் 2 பெண் போலீசார் காயம் அடைந்தனர். ஒரு அமைச்சு பெண் ஊழியரும் நாய் கடியால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து கமிஷனர் அலுவலகத்தில் முகாமிட்டிருந்த நாய்களை, மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சி நாய் பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடித்து சென்றனர். அந்த நாய்களை கருத்தடை செய்து மீண்டும் கமிஷனர் அலுவலகத்திலேயே கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் நாய்கள் வழக்கத்தைவிட தற்போது நிலைமை மோசமானதால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குள் நாய்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கமிஷனர் ஆபிஸில் நாய்களை விரட்டி அடிப்பதற்காக ஆயுதப்படை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீசார் கையில் லத்தியோடு சுற்றுகிறார்கள. வாசலில் துப்பாக்கியுடன் காவல் காக்கும் பெண் போலீசாரும் நாய்களை நுழைய விடாமல் தடுப்பதுடன் விரட்டியும் அடிக்கிறார்கள். அச்சுறுத்தும் வகையில் இருக்கும் நாய்கள் கமிஷனர் ஆபிஸ் வளாகத்திற்குள் நுழைய முடியாமல் தற்போது வெளியில் தான் உலா வருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications