கொரோனா மரணம் - மத்திய அரசின் விதிகளில் சமரசம் செய்யாதீங்க - அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் போது, மத்திய அரசின் விதிகளில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமலும் மதரீதியிலான உணர்வுகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நீத

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும்போது, மத்திய அரசின் விதிகளில் சமரசம் செய்து கொள்ளாமல், மத உணர்வுகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், இறுதிச்சடங்குகள் நடத்த போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா பாதித்து பலியான மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கீழ்ப்பாக்கம் மற்றும் வேலங்காடு மயானம் அமைந்துள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தகராறில் ஈடுபட்டனர். அத்துடன் சைமனின் உடல் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மீதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

Strickly follow Centres Guidelines For Disposal Of COVID Victims Bodies HC order

இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு பின்பற்றக்கூடிய நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் என்ன என்பது குறித்து தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டி விதிமுறைகள் உள்ளதாகவும், அதன் அடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை அரசாணை பிறப்பித்து உள்ளதாகவும், தமிழக டிஜிபி இது சம்பந்தமாக உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநகர ஆணையர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சைமனின் மனைவி ஆனந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சைமன் இறந்த இரண்டு மணி நேரத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் அவசரம் காட்டியதாகவும், அடக்கத்தின் போது மதரீதியான சடங்குகளை செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளதாகவும் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும், மத்திய அரசின் விதிகளையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் போது, மத்திய அரசின் விதிகளில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமலும் மதரீதியிலான உணர்வுகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், இறுதிச்சடங்குகள் நடத்த போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இறுதிச்சடங்கின் போது, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க, காவல்துறையினருக்கு, அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அந்தத் தகவலைப் பெறும் காவல்துறையினர் போதுமான அளவு போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+