எத்தனை சலுகைகள்? அரசு கல்லூரியில் சேரப் போறீங்களா? இந்த தகவல் உங்களுக்காக தான்! மறக்காம இதை பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்காக இணைய தள முகவரியும், கல்லூரிகளில் சேர்க்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அதேபோல சிபிஎஸ்சி மாணவர்களுக்கு 12ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து 2024-2025 கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்வதற்காக இன்று முதல் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை: அதன்படி இந்நிலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்புகள் சேர்வதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் http://www.tngasa.in என்ற இணையதளம் மூலம் பெறலாம். மேலும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை மையங்கள் மூலம் விண்ணப்பங்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்டணம்: இந்த மையங்களின் பட்டியல் கூறப்பட்ட இணையதள முகவரியில் வெளியிடப்பட்டிருக்கிறது. விண்ணப்பகட்டணமாக ஒரு மாணவருக்கு 48 ரூபாயும் பதிவு கட்டணமாக இரண்டு ரூபாயும் வசூலிக்கப்படும் எஸ்சி எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை பதிவு கட்டணம் மட்டும் இரண்டு ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை இடங்கள்: தமிழகத்தை பொறுத்தவரை கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. அவற்றில் ஒரு லட்சத்து 7395 இடங்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டு சுமார் இரண்டரை லட்சம் பேர் அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பித்திருந்தனர். அனைத்து இடங்களும் கடந்தாண்டு நிரப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சலுகைகள்: அரசு கல்லூரியில் சேரும்போது மிகக் குறைந்த கட்டணம் தரமான ஆசிரியர்கள் அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் பாடத்திட்டம் என பல்வேறு வகையில் சிறப்புகள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இலவச பேருந்து பயணம் மாணவர்களுக்கு உதவித் தொகை உள்ளிட்டவையும் அரசால் வழங்கப்படுகிறது. மேலும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
-
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications