’நான் முதல்வன்’ சிக்சர்..அக்கவுண்டுக்கே வரும் 7500! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..சூப்பர் அறிவிப்பு!
சென்னை: 2025ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மாதம் 7500 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான மதிப்பீட்டு தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக நான் முதல்வன் - போட்டித் தேர்வுகள் பிரிவின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக சிறப்புத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த 07.03.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இப்பிரிவு, தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசின் 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்துடன் இணைந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள் 1000 பேர் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இத்திட்டம் கடந்த ஆண்டு முதல் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக அடுத்த ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வை வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தமிழக மாணவர்கள் 1000 பேருக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி (இன்று) முதல் ஆன்லைனில் (https://www.naanmudhalvan.tn.gov.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 17-ம் தேதி ஆகும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு செப்டம்பர் 9-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications