வள்ளலாரும், வள்ளுவரும் சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்.. ஆளுநருக்கு சு.வெங்கடேசன் பதிலடி
சென்னை: வள்ளலாரை சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி, வள்ளலார் 10,000 ஆண்டுகால சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என புகழ்ந்துள்ளார். ஆளுநர் ரவியின் இந்த பேச்சு கடும் அதிர்வலைகளையும் விவாதத்தையும் உருவாக்கி உள்ளது.

சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார். ஆனால் ஆளுநரோ சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என்கிறார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "மதித்த சமயதம் வழக்கெல்லாம் மாய்ந்தது, வர்ணாசிரமெனும் மயக்கமும் சாய்ந்தது" என்று சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என்கிறார்ஆளுநர் . ஆளுநர் அவர்களே! வள்ளுவரும் வள்ளலாளரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள். மட்டுமல்ல சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார்.
“மதித்த சமயதம் வழக்கெல்லாம் மாய்ந்தது,
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 22, 2023
வர்ணாசிரமெனும் மயக்கமும் சாய்ந்தது” என்று சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என்கிறார்ஆளுநர் .
ஆளுநர் அவர்களே
வள்ளுவரும் வள்ளலாளரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள்.
மட்டுமல்ல சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள். pic.twitter.com/DK5B45Axz8
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் தமது ட்விட்டர் பக்கத்தில், சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி!
-----
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே!
--------
நால்வருணம் ஆசிரமம் ஆனநம் முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே
மெய்வருணம் தோல்வருணம் கண்டறிவா ரிலைநீ
விழித்துப்பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே! என பாடியவர் வள்ளலார் என ஆளுநர் ரவிக்கு பதிலளித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications