சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதான் எடப்பாடியார்.. சசிகலா இல்லாமலேயே.. "சபாஷ்".. அடிச்சு சொன்ன நம்மவர்கள்..!

சசிகலாவின் வருகையால் அதிமுகவில் தாக்கம் ஏற்படுமா என்ற கேள்வி எழுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, கட்சிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று பலமுறை தமிழக முதல்வர் சொல்லி உள்ளார்.. கிட்டத்தட்ட அதே கருத்துதான், மக்களின் எண்ண ஓட்டமாகவும் இருக்கிறது போலும்..!

சசிகலா அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று ஏற்கனவே டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

இதற்கு பிறகு, அவர் சசிகலா பற்றி வெளிப்படையாக யாரிடமும் பேசவே இல்லை.. ஆனால், அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கும்போது மட்டும், தனிப்பட்ட முறையில் அவர்களிடம் மனம் விட்டு பேசியுள்ளார்.

பேச்சு

பேச்சு


"உங்களுக்கு எல்லாம் இந்த 4 வருஷம் சுதந்திரம் தந்திருக்கேன்.. எனக்கு துரோகம் செய்துடாதீங்க.. நம்ம கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல பேர் இருக்கு.. வரப்போகிற தேர்தலில் கடுமையாக உழைக்கணும்" என்று கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இந்த சமயத்தில்தான், சசிகலா சென்னை வந்தார்.. அவர் வந்தவுடனேயே ஆம்பூர், வேலூர், திருப்பத்தூரில் பேசும்போதெல்லாம் நேரடியாகவே அமமுகவை அட்டாக் செய்தார்.. டிடிவி தினகரனை வரிக்கு வரி விமர்சித்து பேசிய முதல்வர், தப்பி தவறி ஒரு இடத்தில்கூட சசிகலாவின் பெயரை சொல்லவில்லை. இதற்கு காரணம், தான் ஒரு மிகப் பெரிய ஆளுமையாக உருவாகி உள்ளோம் என்பதுடன், இந்த 4 வருஷத்தில் மக்களிடம் நல்ல செல்வாக்கை பெற்றுள்ளோம் என்பதால்தான். அதனால்தான் சசிகலாவை கட்சிக்குள் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று சொல்லி வருகிறார்.

பாஜக

பாஜக

மற்றொரு புறம், பாஜக வேறு மாதிரி கணக்கு போட்டுவருகிறது.. இப்போதைய அதிமுகவில் ஆளுமை யாருமே இல்லை, கட்சியும் பலமாக இல்லை, பூதாகரமாகிவரும் திமுகவுக்கு டஃப் தரும் வகையில் அதிமுக வலுவாக இல்லாததால், சசிகலாவை இணைத்து, ஒரே தலைமையின்கீழ் அதிமுக கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. ஆக, சசிகலா இருந்தால்தான் அதிமுக வலுப்பெறும் என்ற கணக்கு உள்ளது.. விரைவில், இதைதவிர, ஏராளமான அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் சசிகலாவுக்கு மறைமுக ஆதரவு தருவார்கள் என்றும் நம்பப்பட்டு வருகிறது.

கேள்வி

கேள்வி

இப்படிப்பட்ட சூழலில்தான் நாம் ஒரு கருத்து கணிப்பு வாசகர்களிடம் நடத்தினோம்.. "சசிகலா இணைந்தால்தான் பலம் பெறும் நிலையில் அதிமுக இருக்கிறதா" என்று ஒரு கேள்வி எழுப்பினோம்.. அதற்கு "ஆமாம்" என்று 31.28 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. "அப்படியெல்லாம் இல்லை" என்ற ஆப்ஷனுக்கு 50.89 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

பலம்

பலம்

"இணைந்தால் நல்லது" என்ற ஆப்ஷனுக்கு 8.29 சதவீதம் பேரும், "அது அவர்களின் விருப்பம்" என்ற ஆப்ஷனுக்கு 9.54 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. சசிகலா இணைந்தால்தான் பலம் பெறும் நிலையில் கட்சி இல்லை என்பதைதான் திரண்டு வந்து பலர் வாக்குகளாக பதிவிட்டுள்ளனர்.. பாதி சதவீத ஓட்டுக்கள் இந்த ஓட்டுக்கள்தான்..

பலம்

பலம்

அப்படியானால், இது எடப்பாடியாரின் பலம் என்றே பார்க்கப்படுகிறது.. இந்த 4 வருடம் முதல்வர் செய்த சாதனைகள் மக்கள் மனதில் பதிந்துள்ளது என்றே பார்க்கப்படுகிறது. சசிகலாவின் வருகை எந்த ஒரு தாக்கத்தையும் அவ்வளவாக ஏற்படுத்தவில்லை என்றே பார்க்கப்படுகிறது.. அதிமுக பிரமுகர்கள், கட்சிக்காரர்கள் சசிகலா மீதான நம்பிக்கையை அதிகம் வைத்திருந்தாலும், மக்களின் மனசில் இருப்பது என்னவோ எடப்பாடியார்தான் என்பதை இந்த கணிப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

English summary
Success of CM Edapadi Palanisamy and Sasikalas entry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X