"ஹாட்ரிக்".. பகடைகளை உருட்டி தள்ளி "சக்சஸ்" செய்த எடப்பாடி.. அதென்ன 3 ராஜதந்திரம்.. அப்ப திமுக ஓட்டு?
சென்னை: எடப்பாடி பழனிசாமி மிகுந்த பூரிப்பில் உள்ளாராம்.. தான் நினைத்த 3 விதமான பிளான்களுமே, ஓரளவு வெற்றியை பெற்று தரும் என்ற நம்பிக்கையும் அவரிடம் கூடிவருகிறதாம்.
கடந்த வாரம் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாகத்தை தந்திருந்தது என்று சொல்லப்பட்டது.
அதாவது, யாருடைய ஆட்சி சிறப்பாக இருந்தது என்ற அவர்களது கேள்விக்கு 53 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியே சிறப்பாக இருந்ததாகவும், 42 சதவீதம் பேர் மட்டுமே ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருப்பதாகவும் அந்த கணிப்பில் வெளிப்பட்டது.

ஹாட்ரிக்
இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதையே பிரதானமாக முன்வைத்து தன்னுடைய 2ம் கட்ட பிரச்சாரத்தை எடப்பாடி மேற்கொள்ளப்போவதாக அதிமுக தரப்பில் சொல்லப்பட்டது. அதேபோல, நேற்றைய தினமும் பேராசிரியர் ராஜநாயகம் வழிகாட்டுதலின்படி, மக்கள் ஆய்வு அமைப்பு 45 களத்தகவல் சேகரிப்பாளர்களுடன் பிப்ரவரி 21 முதல் 23 வரை 1590 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது... இதில் யாருக்கு எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பது குறித்த கருத்துகணிப்பின் முடிவில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ்ஸுக்கு 39.5 சதவிகிதம் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

3 ப்ளான்கள்
அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு 24.5 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 9.5 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் என்றும், அதிலும், முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்கு இந்த கட்சிக்கு கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு 2 சதவிகிதம், பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு 1.5 சதவிகிதம், நோட்டாவிற்கு 2 சதவிகிதம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

3 கணைகள்
இப்படி அடுத்தடுத்து வெளியாகி உள்ள 2 கணிப்புகளுமே எடப்பாடியை குளிர வைத்துள்ளதாம். இந்த இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே எடப்பாடி பழனிசாமி மொத்தம் 3 விஷயத்தில் உறுதியாக இருந்தார்.. அதிக வாக்கு வித்தியாசத்தில் ஓட்டு வங்கியை தக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவரது முதல் குறிக்கோளாக இருந்ததாம்.. அடுத்ததாக, சிறுபான்மையினர் வாக்குகளை இந்த முறை முழுமையாக பெற்றுவிட வேண்டும், மூன்றாவதாக, ஓபிஎஸ் குடைச்சலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அந்த 3 ப்ளான்கள் ஆகும்.

சக்ஸஸ் எடப்பாடி
இந்த 3 பிளான்களுமே கிட்டத்தட்ட சக்சஸ் என்றே சொல்லலாம்.. அதைதிமுகவை எதிர்த்து நிற்கும் கட்சிகள் டெபாசிட் கூட வாங்ககூடாது, அந்த அளவுக்கு இறங்கி வேலையை பாருங்கள் என்று முதல்வர் ஸ்டாலினே சீனியர் அமைச்சர்களிடம் உத்தரவு பிறப்பித்திருந்தாராம்.. இதைதான் நொறுக்க வேண்டும் என்று எடப்பாடி முடிவு செய்தாராம். அதேபோல, ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான், சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழக்க நேரிட்டது என்பதால், இந்த முறை, பிரச்சாரங்களில் பெரிதாக பாஜக நிர்வாகிகளை இணைத்து கொள்ளாமல், முக்கிய இடங்களில் பாஜக நிர்வாகிகளை தவிர்த்துவிட்டும், வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் அதிமுக நிர்வாகிகள் இறங்கினார்கள்.

பின்னடைவுகள்
தமிழக பாஜக தலைவரின் பிரச்சாரத்தில் பங்கேற்க போவதில்லை என்பதையும் அறிவித்த எடப்பாடி, பாஜகவுடன் கூட்டணி வைத்ததாலேயே அதன் கொள்கைகளில் உடன்பட்டதாக அர்த்தம் கிடையாது என்பதையும் தன் பிரச்சாரங்களில் தெளிவுபடுத்தியிருந்தார்.. இதனால் சிறுபான்மையினர் வாக்குகள் எடப்பாடி பக்கம் சாயும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைபோலவே, பாஜக தரப்பிலும், நீதிமன்ற தரப்பிலும் ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டதால், அவரது நிலைப்பாடு குழப்ப நிலையை எட்டி உள்ளது.

செங்குந்த முதலியார்
மேலும், கவுண்டர் சமுதாய ஓட்டுக்கள் எடப்பாடிக்கு மெஜாரிட்டி உள்ள நிலையில், அந்த ஓட்டுக்களை தவிர, மற்ற அனைத்து சமுதாய ஓட்டுக்களையும் அதிமுக பக்கம் திருப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.. அதிலும், செங்குந்த முதலியார் வாக்குகள் ஈரோடு கிழக்கில் குறிப்பிட்ட அளவுக்கு உள்ளதால், இந்த வாக்குகளையும் அதிமுக பக்கம் கொண்டு வர வேண்டும் என்றும் வாய்மொழியாக உத்தரவிட்டு, அதற்கான வேலைகளும் துரிதமாகின.. இதைதவிர, அமமுக, மநீம கட்சிகள் தற்போது போட்டியிடாத சூழலில், அந்த கட்சி நிர்வாகிகளையும், அதிருப்தியாளர்களையும் அதிமுகவுக்குள் கொண்டுவருமாறும் உத்தரவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

3 ப்ளான்கள்
அதேபோல, தொகுதியில் ஒவ்வொரு பூத்துக்கும் அதிமுக சார்பில் 50 பேர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 50 பேரும் ஆளுக்கு 4 அதிமுகவினர் அல்லாதவரின் வாக்குகளை அள்ளி வரவேண்டும் என்றும் டார்கெட் நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இப்படியான வியூகங்களை முன்னெடுத்த நிலையில்தான், கருத்து கணிப்புகளின்படி, எடப்பாடியின் 3 திட்டங்களும் ஓரளவு நிறைவேறி உள்ளதாக சொல்கிறார்கள்.. இது ஒரு கணிப்புதான் என்றாலும், வாக்கு எண்ணிக்கையின்போதுதான் நிஜநிலவரம் தெரியவரும்.. ஒருவேளை, பலம்பொருந்திய இந்த வலுவான வாக்கு வங்கியை, தக்க வைத்துவிட்டால், நிரந்தர பொதுச் செயலாளராக தான் மாறுவதோடு டெல்லியின் ஆதரவையும் முழுமையாக பெற்று விடலாம் என்று நம்பிக்கையிலும் உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications