தனுஷ், சமந்தா, ஜெயம் ரவி, இமான், ஏ.ஆர் ரகுமான்.. அடுத்தடுத்து விவாகரத்து.. இணைக்கும் 4 காரணங்கள்!
சென்னை; தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து பலரும் விவாகரத்து செய்து வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகள், பல ஆண்டுகளாக திருமண உறவில் இருந்தவர்கள் கூட விவாகரத்து செய்ய தொடங்கி உள்ளனர். சினிமா திரை உலகை இந்த தொடர் சம்பவங்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
1. சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது நீண்ட கால காதலி, மனைவி சைந்தவியை விவாகரத்து செய்தார். இருவரும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் மனஸ்தாபம் காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர்.

2. அதேபோல் இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவர்கள் விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது.
3. சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி இதேபோல் விவாகரத்து செய்தார். ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ரவி, விவாகரத்து பற்றி தன்னிடம் ரவி எதுவும் சொல்லவில்லை. என்னிடம் ஆலோசனை செய்யாமல் விவாகரத்து பற்றி அறிவித்துள்ளதாக ஆர்த்தி ரவி புகார் வைத்துள்ளார். அதில், சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
4. பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன். என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல., என்று ஜெயம் ரவியின் மனைவி குறிப்பிட்டு இருந்தார்.
5. இது போக நடிகை சமந்தா - நாக சைத்தன்யா, நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து விவகாரத்து செய்துள்ளனர்.
6. ஏ. ஆர் ரகுமான்: ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார்.
7. சாயிரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை பிரிவதாக அவரது அவரது வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார்.
என்ன காரணம்?: சினிமா துறையில் திருமண உறவுகள் முறிய பின்வரும் விஷயங்கள் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன./ பின்வரும் விஷயங்களில் ஏதாவது ஒன்று பிரபலங்களின் விவாகரத்திற்கு காரணமாக அமைந்து விடுகிறது.
1. சினிமா உலகில் இருப்பதால் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய அளவில் கவனம் செலுத்த முடிவது இல்லை.
2. சினிமா துறையில் உள்ளவர்களின் தனிப்பட்ட ஒழுக்கம் சந்தேகத்திற்கு உள்ளாகிறது. கிசுகிசுக்கள் பரப்பப்படுகிறது இது மோதலுக்கு வழிவகுக்கிறது.
3. சினிமா துறையில் புழங்கும் பணம் விவாகரத்துக்கு காரணமாக அமைகிறது.சிலருக்கு பொருளாதாரம் உயர்வதால் விவகாரத்து ஏற்படும். சிலருக்கு பொருளாதாரம் சரிவதால் விவாகரத்து ஏற்படும்.
4. திருமணம் கடந்த உறவு என்பதும் கூட விவாகரத்துக்கு காரணமாக சில இடங்களில் அமைந்து விடுகிறது.












Click it and Unblock the Notifications