ஒரே நாளில் ட்விஸ்ட் கொடுத்த வானிலை.. ஊட்டி போல மாறிய சென்னை.. திடீர் மழை எப்படி.. வெதர்மேன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரத்தில் எல்லாம் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்துக் கொண்டு இருந்த வெப்பம் இன்று திடீரென மாறி இன்று ஊட்டி போல சென்னை மாறியது. ஒரே நாளில் சென்னை மக்களுக்கு இதமானதாக மாறியது எப்படி? என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. அக்கினி நட்சத்திர காலம் முடிந்த போதும் வெயிலின் தாக்கம் ரண கொடூரமாக இருந்தது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே போவதற்கே அஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்துக் கொண்டு இருந்தது. மக்களை பாடாய் படுத்திய வெயிலால் பள்ளிகள் திறப்பும் இரு முறை தள்ளி வைக்கப்பட்டது. சென்னையில் வெப்பம் தினமும் 100 டிகிரி செல்சியை தாண்டி பதிவானது.

Sudden changes in the Climate, Moderate Rain in chennai - Tamil Nadu weather Man explains about weather

இரவில் கூட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. எப்போது தான் இந்த வெயிலின் உக்கிரம் தணியும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த நிலையில், இன்று காலை சென்னை வானிலை மக்களுக்கு அப்படியொரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. நேற்று முன் தினம் வரை தரையில் கால் வைக்க முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்துக் கொண்டு இருந்தது.

நேற்று சென்னையில் ஓரளவு வெப்பத்தின் தாக்கம் குறைந்து இருந்த நிலையில், இன்று காலை நிலமை அப்படியே மாறிப்போனது. காலையில் இருந்தே, விட்டு விட்டு லேசான மழை, காற்று என இதமான சூழல் நிலவியது. ஒருவேளை தப்பித்தவறி ஊட்டி பக்கம் எதுவும் வந்து விட்டோமோ என சென்னை மக்கள் காலையில் எழுந்ததும் நினைக்காத குறைதான். இத்தனை நாட்கள் புலம்ப வைத்த வானிலை இன்று சற்று இதமாக மாறியிருக்கிறதே.. என டீக்கடைகளிலும் மக்கள் காலையிலே ஒரு சூடாக போண்டா பஜ்ஜியையும் டீயை கையில் வைத்தபடி நின்று பேசியதை காண முடிந்து.

விடுமுறை தினமான இன்று காலையில் வாக்கிங் சென்ற மக்களும் வெயிலின் தாக்கம் தணிந்து இன்று நிலவிய ஜில் கிளைமேட்டை ரசித்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது. சென்னை தவிர்த்து வெளி மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் வரையிலும் கூட மழை நீடித்தது.

சென்னையிலும் காலை முதலே விட்டு விட்டு பெய்த மழையை மக்கள் ரசித்தபடி குடை கூட பிடிக்காமல் பல இடங்களில் செல்வதை காண முடிந்தது. கடந்த வாரத்தில் எல்லாம் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்துக் கொண்டு இருந்த வெப்பம் இன்று திடீரனெ மாறியது மக்களுக்கு இதமானதாக மாறியது எப்படி? என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.

பிரதீப் ஜான் கூறுகையில், "வடகிழக்கு திசையில் இருந்து மேகக்கூட்டங்கள் நகர்ந்து வந்ததே மழைக்கான காரணம். ஜூன் மாதம் என்பது தென்மேற்கு பருவ மழைக்காலம். தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவது வழக்கம். இதற்கு முன் 1991, 1996, 2014 ஜூனில் வடகிழக்கு திசையில் இருந்து மேகங்கள் நகர்ந்து மழை பொழிந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+