திடீரென சென்னையில் பல இடங்களில் போட்டுத்தாக்கும் மழை.. சென்னைவாசிகள் செம ஹேப்பி!
சென்னை: தலைநகர் சென்னையில் இப்போது பரவலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி புறநகரிலும் நல்ல மழை பெய்வதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் வரை வெப்பம் நம்மை வாட்டி வதக்கி வந்தது. இருப்பினும், அதன் பிறகு திடீரென சில நாட்களில் வானிலை தலைகீழாக மாறியது. இதனால் பல இடங்களில் நல்ல மழை பெய்தது.

அதன் பிறகு வெப்பம் தொடர்ந்து கட்டுக்குள் தான் இருந்து வருகிறது. இதற்கிடையே தலைநகர் சென்னையில் இப்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த ஜூன் மாதம் அதீத வெப்பம் மிகுந்த மாதமாக இருந்தது. ஜூன் மாதம் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 10 நாட்களுக்கு மேல் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை எட்டியது. பொதுவாக மே மாதம் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு ஜூன் மாதம் முதல் இரண்டு வாரங்களில் பல நாட்கள் வெப்பம் ஓவராகவே இருந்தது.
இருப்பினும், அதன் பிறகு சில நாட்களில் வெப்பம் தலைகீழாக மாறியது. பல இடங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாகச் சென்னையில் கடந்த மாதம் கனமழை கொட்டி தீர்த்தது. பல ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜூன் மாதம் அதிக மழை பெய்தது. அதன் பிறகு பெரியளவில் மழை பெய்யவில்லை என்றாலும் ஓரளவுக்கு வெப்பம் தணிந்தே காணப்பட்டது. இதற்கிடையே இப்போது தலைநகர் சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

கோடம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, தி. நகர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல அசோக் நகர், கிண்டி, வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், வள்ளுவர் கோட்டம், உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள் செம மகிழ்ச்சியில் உள்ளனர்.
இப்படி சென்னையில் நகரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நகர் பகுதிகள் மட்டுமின்றி, பூந்தமல்லி, மாங்காடு,கரையான்சாவடி. நசரத்பேட்டை, குமணன்சாவடி உள்ளிட்ட உள்ளிட்ட புறநர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழை காரணமாகச் சென்னையில் வெப்பம் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், சென்னைவாசிகள் சில் கிளைமேட்டை நன்கு என்ஜாய் செய்து வருகின்றனர்.
வானிலை மையம்: முன்னதாக இன்று வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று ( ஜூலை 9) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்" என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications