இன்போசிஸ் தொடங்க.. நாராயண மூர்த்திக்கு ரூ 10 ஆயிரம் கடனாக கொடுத்த சுதா மூர்த்தி.. சுவாரஸ்யம்
சென்னை: இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்க தனது கணவர் நாராயண மூர்த்தி ரூ 10 ஆயிரத்தை மனைவி சுதா மூர்த்திதான் கடனாக கொடுத்தாராம். இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து தெரியுமா?
இன்போசிஸ் எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி புனேவில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. இந்த நிறுவனத்தின் கிளை 22 நாடுகளில் உள்ளது.

இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளது. இந்த நிறுவனத்தை நாராயண மூர்த்தி, நந்தன் நீல்கேனி, என்.எஸ்.ராகவன், கிரிஸ் கோபாலகிருஷ்ணன், சிபுலால், தினேஷ், அசோக் அரோரா ஆகிய 6 பேர தொடங்கினர். இதன் ஆண்டு வருமானம் ரூ149,468 கோடியாகும்.
கடந்த ஜூன் மாதம் வரை இந்த நிறுவனத்தில் 3.36 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இத்தகைய இந்த நிறுவனம் தொடங்க நாராயணமூர்த்திக்கு அவருடைய மனைவி சுதா மூர்த்திதான் ரூ 10000 கடனாக கொடுத்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் உயர்கல்வி படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு அந்த காலத்தில் இருந்தது.
ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறிந்து உயர்கல்வி படித்து தனித்துவமிக்க பெண்ணாக உருவெடுத்தவர் சுதா மூர்த்தி. 1960 ஆம் ஆண்டுகளில் இவர் பயின்ற பல்கலைக்கழகத்தில் கல்வி பயில வந்த ஒரே பெண் இவர் மட்டும்தான். மேலும் சுதா மூர்த்தி பொறியியல் தேர்வையும் படித்து முடித்தார். பிறகு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டெல்கோவில் முதல் பெண் பொறியாளராக பணியாற்றினார்.
சுதா மூர்த்தி பத்மபூஷன் விருது பெற்றவர். இவர் இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். ஆனால் இன்போசிஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நாராயணமூர்த்தி உருவாக்குவதற்கு சுதா மூர்த்தி கடனாக வழங்கிய ரூ 10 ஆயிரம் தான் அடிப்படையாக அமைந்தது. உலகளவில் முதலீட்டாளர்களில் ஒருவராக சுதா மூர்த்தி திகழ்கிறார்.
பாலின பாகுபாடு நிறைய காலத்திலேயே சாதித்த தன்னை போல் ஒருவரைத்தான் திருணம் செய்து கொள்ள வேண்டும் என சுதா நினைத்திருந்தார். அந்த வகையில் நாராயண மூர்த்தி சுதாவுக்கு அறிமுகமானார். இருவரும் புத்தகங்களை பரிமாறிக் கொண்டனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
சாதாரண ஊழியராக பணிக்கு சேர்ந்த நாராயண மூர்த்தி தனது மனைவி சுதாவின் பிறந்த நாளின் போது தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு அந்த தகவலை வீட்டில் தெரிவித்தார். அப்போது சுதா எந்த அதிர்ச்சியும் அடையாமல் இன்போசிஸ் என்ற புதிய தொழிலை தொடங்க நாராயண மூர்த்திக்கு உறுதுணையாக இருந்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications