ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே "மர்ம சூட்கேஸ்" எச்சரிக்கை ஒலியால் பதற்றம்! காரில் இருந்து வீசியது யார்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் முன்பாக மர்ம நபர்கள் சூட்கேசை வீசி சென்றுள்ளனர். சி.ஆர்.பி.எப் போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்ததில் எச்சரிக்கை ஒலி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்க வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மனித வெடிகுண்டு தாக்குதலால் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி உயிர் நீத்த இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இந்த நினைவிடம் உள்ளது. நினைவிடம் முன்பாக செல்லும் சாலையில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.

ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கும் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள இந்த பகுதியில் இன்று மர்ம நபர்கள் சூட்கேசை வீசிச் சென்றுள்ளனர். நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த மர்ம நபர்கள் சிலர் காரை நினைவிடம் முன்பாக நிறுத்தி விட்டு, சூட்கேசை எடுத்து வீசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை போலீசார், மர்ம நபர்கள் வீசிச்சென்ற சூட்கேசை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். இதில், எச்சரிக்கை ஒலி எழுந்தது. இதனால் அச்சம் அடைந்த பாதுகாப்பு படையினர், ஸ்ரீபெரும்பதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்து விட்டு சூட்கேசை யாரும் நெருங்கிவிடாத படி பேரிகார்டு வைத்து மறித்துள்ளனர்.

தடயவியல் நிபுணர்கள் அந்த சூட்கேசில் என்ன உள்ளது என்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் நினைவிடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சூட்கேசை வீசிய மர்ம நபர்கள் குறித்தும் அவர்கள் வந்த காரின் பதிவெண்ணை அடையாளம் காணும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications