ஈரக்குலையே நடுங்கி போச்சு.. ஓனர் சடலத்தை தேடி அலைந்த கன்று.. கதறி கதறி கண்ணீர்.. நொறுங்கிய இதயம்
வளர்த்தவர் சடலத்தை சுற்றி சுற்றி வந்து கன்று ஒன்று கதறி அழுகிறது
சென்னை: ஓனர் உயிரிழந்துவிட்ட நிலையில், வளர்ப்பு கன்று ஒன்று அவரது சடலத்தையே சுற்றி சுற்றி நின்று அழும் வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.
2 வருடங்களுக்கு முன்பு உபியில் ஒரு சம்பவம் நடந்தது.. கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் அனிதா ராஜ் சிங்.
இவர் 12 வருடங்களுக்கு முன்பு, தெருவோரத்தில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த நாய்க்குட்டி ஒன்றை எடுத்து வந்து சிகிச்சையளித்து பாசமாக வளர்த்து வந்துள்ளார்.

ஜெயா பாவம்
அந்த நாய்க்கு ஜெயா என்று பெயர் வைத்தார்.. ஒருநாள் அனிதா ராஜ் சிங், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்... ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, அனிதா ராஜ் சிங்கின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது... அனிதாவின் மரணம் அவரது குடும்பத்தை துக்கத்தில் ஆழ்த்திய நிலையில், அவர் ஆசையாக வளர்த்து வந்த ஜெயா குரைத்துக்கொண்டே அழ ஆரம்பித்தது..

சமாதானம்
நேரம் ஆக ஆக ஜெயாவின் அழுகை அதிகமாகி கொண்டே போனது.. இதனால், துக்க வீட்டில் இருந்தவர்கள், ஜெயாவை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.. அங்கிருந்து ஜெயாவை நகர்த்தவும் முடியவில்லை.. அழுகையையும் நிறுத்த முடியவில்லை.. அழுது கொண்டே இருந்த ஜெயா, பிறகு திடீரென அந்த குடியிருப்பின் 4வது மாடிக்கு ஓடியது.. அங்கிருந்து சத்தமாக அழுதுகொண்டே கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது..

ஓ மை காட்
இதை பார்த்து பதறிப்போன குடும்ப உறவினர்கள் படுகாயமடைந்த ஜெயாவை, அருகிலிருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், ஜெயா ஏற்கெனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள்.. இந்த சம்பவம் அப்போது உபியையே அதிர வைத்தது.. அந்தவகையில், இப்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. இது எந்த ஊர் என்று தெரியவில்லை.. வெளிமாநிலம் போல தெரிகிறது.. கன்றுவின் வீடியோ மட்டும் வைரலாகி வருகிறது..

சடலங்கள்
இந்த கன்றுவை பாசமாக வளர்த்தவர் இறந்துவிட்டார்.. அதனால், பரந்தவெளி ஒன்றில் அவரது சடலத்தை உறவினர்களும் மற்றவர்களும் தீவைத்து எரிக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.. இதே இடத்தில் ஆங்காங்கே மேலும் சிலரது சடலங்கள் எரியூட்டப்பட்ட வைக்கப்பட்டுள்ளன.. அந்தந்த இடங்களில் கும்பல் கும்பலாக சம்பந்தப்பட்ட உறவினர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.. இந்த கன்று வேகமாக அந்த திறந்த வெளி பகுதிக்கு வருகிறது..

ஓனர் + கதறல்
நிறைய சடலங்கள் ஆங்காங்கே இருப்பதால், ஓனர் சடலம் எது என்று தேடுகிறது.. கடைசியில் சரியாக கண்டுபிடித்து, ஓனர் சடலத்தின் அருகில் சென்று நின்று, கதறி கதறி அழுகிறது.. ஓனரை முகர்ந்து முகர்ந்து பார்த்து மறுபடியும் அழுகிறது. வளர்த்த கன்று என்பதால், அதனை அங்கிருந்த உறவினர்களும் யாரும் விரட்டியடிக்கவில்லை.. அவர்களும் சேர்ந்து அழுகிறார்கள்.. சில சமயங்களில், மனிதர்களைவிட சில மிருகங்களே பாசத்தில் மிஞ்சிவிடுகின்றன.. மிருகங்களிடம் இருந்து மனிதன் கற்றுக்கொள்வது இன்னமும் நிறையவே இருக்கிறது.. வேறென்ன சொல்ல?!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications