பள்ளிகளுக்கு குட் நியூஸ்.. அன்பில் மகேஷ் அதிரடி.. செம குஷியில் மாணவர்கள், பெற்றோர்கள்..!
நீட் தேர்வு விண்ணப்பம் குறித்து அன்பில் மகேஷ் பேட்டி தந்துள்ளார்
சென்னை: தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமூக அக்கறையுடன் கூடிய மாணவர்களை உருவாக்கி வரும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் அன்பாசிரியர் 2. O என்ற விருது வழங்கப்படுகிறது .
ஏற்கெனவே கடந்த 2020-ம் ஆண்டில் முதல்முறையாக "அன்பாசிரியர்" விருது வழங்கப்பட்டது... அதற்கு பொதுமக்களிடம் ஏராளமான ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது.

விண்ணப்பம்
இதையடுத்து, அன்பாசிரியர் 2.0 என்ற விருது பெறுவது குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. எனவே, 'அன்பாசிரியர் 2021' விருதுக்கு விண்ணப்பிக்குமாறு தனியார் செய்தி நிறுவனம் ஒன்று அழைப்பு விடுத்திருந்தது.. இதற்கு தமிழகத்தின் 38 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்த 532 ஆசிரியர்களும் விண்ணப்பித்தனர்... விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 425 பேர் முதல்கட்ட நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டிருந்தனர்.. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இறுதிச்சுற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

நேர்காணல்
இதற்கான நேர்காணலின்போது, பாலின சமத்துவம், சமூகநீதி, பள்ளி மேம்பாட்டில் பங்கு, நூல் வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முன்வைத்து 10 கேள்விகள் ஆசிரியர்களிடம் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் தேர்வுக் குழுவால் மதிப்பெண் வழங்கப்பட்டது. இதன் மூலம் மாவட்டம் வாரியாக அன்பாசிரியர்கள் தேர்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அன்பில் மகேஷ்
பின்னர் தேர்வுக் குழு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 46 ஆசிரியர்களுக்கு 'அன்பாசிரியர் 2021' விருதுகள் நேற்று வழங்கப்பட்டன.. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருதுகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.. சென்னை ஆழ்வார்பேட்டையில் குறிப்பிட்ட அந்த தனியார் நாளிதழ் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.. பல்வேறு ஆசிரியர்களுக்கு விருது வழங்கி, அன்பில் மகேஷ் கௌரவித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் கட்டணத்தை செலுத்தும் வகையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பத்தை அதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் காலநீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தப்பட்டு பிறகு முடிவு தெரிவிக்கப்படும்.. ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு விண்ணபிக்க காலக்கெடுவை நீட்டிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications