சூப்பர் ப்ளூ மூன்..! வானத்திலே வெள்ளி நிலா.. நாளைக்கு நீல நிலா.. பார்க்க மிஸ் பண்ணாதீங்க
சென்னை: வானத்தில் சில நேரங்களில் அதிசயமான சம்பவங்கள் நிகழலாம். கிரகணங்கள் அப்படி ஒரு அரிதான வானியல் நிகழ்வுதான். அதே போல ரெட் மூன், ப்ளூ மூன் எனப்படும் அரிதான நிகழ்வுகளும் ஆண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடும். மிகவும் அரிதாக நடைபெறக்கூடிய நிகழ்வு ஒன்று நாளைய தினம் விண்ணில் நிகழப் போகிறது. புதன் கிழமை சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் சூப்பர் நீல நிலவு தோன்ற உள்ளது.
ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவு நாட்கள் வரும்போது, இரண்டாவது முழு நிலவு ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது. இதனை நாம் சாதாரணமாக கண்களால் பார்க்கலாம். தொலை நோக்கி எதுவும் தேவையில்லை. வழக்கமாக தோன்றும் பவுர்ணமியை விடவும் நாளைய தினம் நிலவு கூடுதல் வெளிச்சத்துடன் பிரகாசமாக தெரியும்.

ஆகஸ்ட் மாதத்தில் 2 பவுர்ணமிகள் இருப்பதாக காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நிலவு பவுர்ணமியாக இருந்தபோது பூமியில் இருந்து 3,57,530 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. நீல நிலவான நாளை மறுதினம் இன்னும் பூமிக்கு பக்கத்தில் வந்து 3,57,244 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து நிலவு பிரகாசிக்கும்.
நிலவின் சுற்று வட்டப்பாதை மிக குறைவாக இருந்து அதே நேரம் பவுர்ணமியாக நிலவு காட்சியளித்தால் அதனை ப்ளூ மூன் அல்லது நீல நிலவு என்று அழைக்கலாம். நீள் வட்டப்பாதையில் பூமியை நிலவு 4,05,696 கிலோ மீட்டர் தூரத்திலும், நாளை மறுதினம் சூப்பர் ப்ளூ மூன் தினத்தன்று 3,57,244 கிலோ மீட்டர் தூரத்திலும் பூமியை வலம் வரும்.
இதுபோன்ற நிகழ்வுகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் என்று அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். சந்திரன் 29.53 நாட்களில் பூமியை ஒரு முறை முழுமையாகச் சுற்றிவருகிறது. ஒரு வருடத்தின் 365 நாட்களில் சந்திரன் பூமியை 12.27 முறை சுற்றுகிறது. பூமியில் ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் ஒரு முழு நிலவு நாள் இருக்கும். இப்படி ஒவ்வொரு ஆண்டிலும் நிலவு பூமியை 12 முறை முழுமையாகச் சுற்றிவந்த பின்பும் அந்த ஆண்டில் இன்னும் 11 நாட்கள் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்த கூடுதல் நாட்கள் சேர்ந்து, அதன் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் 22, மூன்று ஆண்டுகளில் 33 என அதிகரிக்கும். இதனால், ஒவ்வொரு 2 அல்லது 3 வருடங்களுக்கும் ப்ளூ மூன் உருவாகும் சூழ்நிலை உருவாகிறது. இப்படித்தான் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வருவதால் இந்த ஆண்டு ப்ளூ மூன் உருவாகிறது.
சில நேரங்களில் ப்ளட் மூன், ரெட் மூன் உருவாகும். கிரகண நேரத்தில் ப்ளட் மூன் உருவாகும். அதுவும் அதிசய நிகழ்வுதான். மே மாதத்தின் முழு நிலவு வசந்த காலத்தில் ஏற்படுவதால் "ஃப்ளவர் ப்ளட் மூன்" என்றும் அழைக்கப்படும். கடந்த ஆண்டு மே மாதத்தில் சந்திர கிரகணத்தின் போது ரத்த நிலா எனப்படும் ப்ளட் மூன் உருவானது.
இந்த ஆண்டு நாளைய தினம் சூப்பர் ப்ளூ மூன் உருவாகிறது. ப்ளூ மூன் என்று அழைக்கப்படுவதால் நிலவானது நீல நிறத்தில் தோன்றும் என்று அர்த்தமல்ல. அதே நேரத்தில் வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக, சந்திரனின் நிறம் நீல நிறமாகத் தோன்றலாம். ஆனால், ப்ளூ மூன் எல்லாமே நீலமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சிவப்பு ஒளியைத் தடுக்கும் வகையில் குறுக்கே ஏதாவது இருந்தால் சந்திரனின் நிறம் நீல நிறத்தில் தோன்றலாம். இதுபோன்ற சூழல் எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதியில் இருந்து பார்க்கும்போது நிலவு நீல நிறத்தில் தெரியக்கூடும்.
சூரியன் மறைந்த உடனேயே மாலை நேரத்தில் வானத்தில் நிலவைப் பார்ப்பது நல்லது. ப்ளூ மூன் நாளைய தினம் இரவு 8:37 மணிக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும். நாளைய தினம் நீல நிலவைப் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் ஓராண்டு வரை காத்திருக்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications