பால் டம்ளருடன்.. கிட்ட போன எம்ஜிஆர்.. கார் கதவை திறந்தால்.. இப்படி கூடவா? அவர்தான் "எட்டாவது வள்ளல்"
சென்னை: ஒருவருக்கு தரப்படும் முக்கியத்துவங்கள் குறித்து, இப்படியெல்லாம்கூட நுட்பமாக யோசிக்க முடியுமா? என்று மலைக்க வைத்தவர்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர்.
தமிழ் சினிமாவில், தயாள குணம் படைத்த மனிதர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகர் எம்ஜிஆர்தான்... அந்த அளவிற்கு இவரது குணத்தை பற்றி, இன்று வரை மீடியாவில் வெளிவந்தவண்ணம் உள்ளது.
அதிலும் எம்ஜிஆருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் பல்வேறு அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அரசியலுக்கும் அப்பாற்பட்டு, எம்ஜிஆரின் சிறப்பியல்புகளையும், வள்ளல் குணத்தையும், தமிழக மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பதற்காகவே, எத்தனையோ மன்றங்கள், இயக்கங்கள் எம்ஜிஆர் பெயரில் இன்றும் செயல்பட்டு வருகின்றன.. இதற்கு மேலும் 2 சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம்.

அட்வான்ஸ் தொகை: பிரபல டைரக்டர் ஸ்ரீதர், "அன்று சிந்திய ரத்தம்" என்ற படத்தில் நடிப்பதற்காக எம்ஜிஆருக்கு ரூ.25,000 அட்வான்ஸ் தந்திருக்கிறார்.. ஆனால், அந்த படம் பாதியில் நின்றுவிட்டதால், அந்த பணத்தை எம்ஜிஆரிடம் ஸ்ரீதர் கேட்கவில்லை. பிறகு, மறுபடியும் எம்ஜிஆரை வைத்து, ஒரு படம் எடுக்க ஸ்ரீதர் நினைத்தார்..
எம்ஜிஆர் நினைத்தால் "ஸ்ரீதரை வரச்சொல்லுங்கள்" என்று சொல்லியிருக்கலாம். ஆனால், ஸ்ரீதருக்கு ஏற்பட்ட நெருக்கடியை நன்றாக அறிந்த எம்ஜிஆர், ஒப்பனையாளர் பீதாம்பரத்திடம் சென்று, "ஸ்ரீதர் பெரிய இயக்குநர். திடீரென்று என்னை வந்து சந்தித்து பேசினால், நெருக்கடியில் இருந்து மீள எம்ஜிஆரை ஸ்ரீதர் போய் பார்த்தார் என்று செய்திகள் வந்துவிடும். நான் போய், அவரை பார்ப்பதும் சரியாக இருக்காது. அதனால், இருவருக்கும் பொதுவாக நம்பியார் வீட்டில் மதிய உணவுக்கு ஸ்ரீதரை வரச்சொல்லுங்கள், அங்கு பேசிக்கொள்ளலாம்" என்றாராம்.
ராதாவரம் தோட்டம்: இதைக்கேட்டு ஸ்ரீதர் நெகிழ்ந்தாலும், எம்ஜிஆர் வீட்டில் நான் அவரை சந்திப்பதுதான் முறை என்று சொல்லி, மறுநாளே ராமாவரம் தோட்டத்தில் சந்தித்து அடுத்த படம் குறித்து பேசியிருக்கிறார்.

அப்போது ஸ்ரீதர். "என் மீது பொறாமை கொண்டவர்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக என்னை பற்றி உங்களிடம் ஏதாவது சொன்னால் அதை நம்ப வேண்டாம், எதுவானாலும் என்னிடமே விளக்கம் கேளுங்கள்" என்றாராம்..
கையெழுத்து: உடனே எம்ஜிஆர், அடுத்த 3 மாதங்களில் தொடர்ந்து நடித்துக்கொடுப்பதாக உறுதியளித்து, அதை ஒரு பேப்பரில் எழுதி கையெழுத்தும் போட்டு ஸ்ரீதரிடம் தந்தாராம்.. அதுமட்டுமல்ல, அட்வான்ஸ் பணத்தை எம்ஜிஆரிடம் தரப்போனால், 'அன்று சிந்திய ரத்தம்' படத்தில் நடிப்பதற்காக தனக்கு அட்வான்ஸாக கொடுத்த ரூ.25,000-த்தை கழித்துகொள்ள சொன்னாராம் எம்ஜிஆர்.. இப்படியெல்லாம்கூட ஒருவரால் சிந்திக்க முடியுமா? என்று கண்ணீர் வடித்தாராம் ஸ்ரீதர்.

ஒருமுறை ஏவிஎம் சரவணன், எம்ஜிஆருடனான தன்னுடைய நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டிருந்தார்.. இவர் தீவிரமான எம்ஜிஆர் ரசிகராம்.. முன்பெல்லாம் எம்ஜிஆர் படங்கள் முதலில் தாம்பரத்தில்தான் ரிலீஸ் ஆகுமாம்.. அதற்கு பிறகுதான், சென்னை நகரில் வெளியாகுமாம். எம்ஜிஆரின் கத்திச்சண்டையை என்றால் அவ்வளவு ஆசையாம்.. தாம்பரம் தியேட்டரில்,
ஷூட்டிங்: "அன்பே வா" ஷூட்டிங் ஷிம்லாவில் நடந்திருக்கிறது.. ஏவிஎம் சரவணனுக்கு அந்த குளிர் தாங்காமல் கடுமையான தொண்டை வலி வந்துவிட்டதாம்.. உடல் நடுக்கமும் சேர்ந்து கொண்டுள்ளது.. அதனால், ஷூட்டிங் பக்கம் போகாமல், காருக்குள்ளேயே முடங்கிக்கிடந்திருக்கிறார்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட எம்ஜிஆர், ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில், ஒரு மப்ளரை சுற்றியபடி சூடான பாலை எடுத்துக்கொண்டு சரவணன் இருந்த கார்கிட்ட சென்று, கதவை தட்டியுள்ளார்.

பால் டம்ளருடன் எம்ஜிஆரை பார்த்ததுமே பதறிப்போனாராம் ஏவிஎம் சரவணன்.. எனக்காக நீங்கள் எதற்கு இப்படிச் சிரமப்படுகிறீர்கள்? யாரிடமாவது கொடுத்து அனுப்பியிருக்கலாமே என்று கேட்டிருக்கிறார்..
கனிந்த மனம்: அதற்கு எம்ஜிஆர், "யாரிடமாவது கொடுத்து அனுப்பியிருக்கலாம்தான். ஆனால், நீங்கள் சாக்குப்போக்கு சொல்லி பாலைக் குடிக்காமல் இருந்துடுவீங்க.. அதனால்தான் நானே கொண்டுவந்தேன். இப்போ நீங்க இதை மறுக்காமல் குடித்துதானே ஆகணும்.. தொண்டை வலிக்கு சூடான பால் ரொம்ப நல்லது.. குடியுங்கள்" என்றாராம் எம்ஜிஆர்.

எப்படி எல்லாம் மற்றவர்களை சிந்தித்து கவுரவப்படுத்துகிறார் என்பதற்கு சிறந்த உதாரணம் எம்ஜிஆர்.. ஒருவரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்து நடத்தும் இந்த பண்புகள் இருந்ததால்தான், அவரது ரசிகர்களிடம், காலங்கள் உருண்டாலும் இன்றும் உயர்ந்து நிற்கிறார் இந்த எட்டாவது வள்ளல்..!!
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications