தட்கல் புக்கிங் விடுங்க.. ஸ்லீப்பர் டிக்கெட் வாங்கி.. ஏசி கோச்சில் போகலாமா? இப்படியொரு வசதி? சூப்பர்
சென்னை: ஏசி கோச்சில் பயணம் செய்ய விரும்புகிறீர்களா? ஸ்லீப்பர் கோச் டிக்கெட்டை வைத்து கொண்டு, ஏசி கோச்சில் பயணிக்க முடியுமா?
சமீபகாலமாகவே ரயில்வே சேவையின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாததாகிவிட்டது.. நாளுக்கு நாள் நகரங்களில் ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

சலுகைகள்: அதனால்தான், ரயில் பயணிகளின் வசதிக்காகவும், நன்மைக்காகவும, இந்தியன் ரயில்வே பல்வேறு சலுகைகளை வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில் சமீபத்தில்கூட, ஒரு சலுகை வெளியாகியிருந்தது. அதாவது, ரயிலில் ஸ்லீப்பர் கோச் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொண்டு ஏசி கோச்சிலும் பயணிக்கலாம்.
இதற்கு 1 ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை.. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், டிக்கெட் முன்பதிவு செய்யும்போது "தானியங்கு மேம்படுத்தல்" (Auto-upgrade) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இப்படி செய்வதால், மேல் வகுப்பு இருக்கை அல்லது பெர்த் காலியாக இருந்தால், பயணிகளின் டிக்கெட் தானாகவே மேம்படுத்தப்படும்.
புதிய அறிவிப்பு: இதற்கு முன்பு விமானங்களில் இப்படியொரு சேவை இருக்கிறது.. அதாவது, எகானமியில் இருந்து வணிக வகுப்பிற்கு டிக்கெட் மேம்படுத்தப்பட்டது போலவே, ரயில்களிலும் டிக்கெட்டுகள், ஸ்லீப்பர் கோச்சிலிருந்து ஏசி கோச்சாக மேம்படுத்தப்பட்டுள்ளன. பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு, இப்படியொரு சலுகையை இந்தியன் ரயில்வே, இலவசமாகவே வழங்கியிருக்கிறது.
ஏசி கோச்சில் இன்னும் பல வசதிகள் இருக்கின்றன.. ஆனால், பெரும்பாலானோர் அதை பற்றி அறிந்துகொள்ளாமலேயே இருக்கிறார்கள்.. உதாரணமாக ஏசி கோச்சில் பயணம் செய்யும்போது, சில சமயங்களில் அதிகமாக குளிர் எடுக்கும்.. இதுபோன்ற நேரங்களில் கோச் அட்டென்ட்டரிமிருந்து, கூடுதலாக எக்ஸ்ட்ரா போர்வையை நாம் வாங்கி கொள்ளலாம்.. இதற்கெல்லாம் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம்..
ரயில்வே அமைச்சகம்: ரயில் பயணத்தின்போது, குளிர்வதுப்போல உணர்ந்தால், உடனே அங்குள்ள உதவியாளரிடம் கூடுதல் போர்வை கேட்கலாம் என்று ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.. எனவே, கூடுதல் போர்வையை நீங்கள் தயக்கமின்றி தாராளமாக கேட்கலாம், எக்ஸ்ட்ரா போர்வை இருந்தால் அவரும் கட்டாயம் உங்களுக்கு வழங்குவார்.
ஒருவேளை உதவியாளர் உங்களுக்கு போர்வையை வழங்க மறுத்தால் நீங்கள் 138 என்கிற எண்ணில் அழைத்து புகார் தரலாம்.. அதேபோல் உங்களது செல்போனிலிருந்து 91-9717680982 என்ற நம்பருக்கு SMS அனுப்பியும் உங்களின் புகாரை தெரிவிக்கலாம். "@RailMinIndia" என்ற ட்வீட் மூலமும் பயணிகள் தங்களின் புகாரை பதிவு செய்யலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications