நீங்க கிரெடிட் கார்டு வெச்சிருக்கீங்களா? வங்கி அட்டை இருந்தாலே சென்னை மெட்ரோ ரயிலில் சல்லுனு போலாம்
சென்னை: கிரெடிட், டெபிட் அட்டைகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் கொண்டு வரப்போகிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது
சென்னையை பொறுத்தவரை, மெட்ரோவின் தேவையை தவிர்க்க முடிவதில்லை. அதனால்தான், நாளுக்கு நாள் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே வருகிறது. அதனால்தான், மெட்ரோ நிறுவனமும், பயணிகளின் வசதிகளை கருதி பல்வேறு அதிரடிகளை வெளியிட்டபடியே உள்ளது.

2 வழித்தடங்கள்: தற்போது, 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக இன்னொரு வழித்தடம் செயல்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் தினசரி 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர்வரை பயணம் செய்கிறார்கள்..
அதனால், பயணிகள் எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறை உட்பட பல்வேறு வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, கிரெடிட், டெபிட் அட்டைகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியையும் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாமா? என்ற ஆலோசனைகள் நடந்து வருவதாக கடந்த வருடமே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்தவசதிகள் குறித்த கூடுதல் தகவல் வெளியாகியிருக்கிறது.
புதிய வசதிகள்: இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சொல்லும்போது, "மெட்ரோ ரயில்களில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் போன்ற இணைப்பு வாகன வசதி படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது.
இதுபோல, மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் வாட்ஸ்அப் app உள்ளிட்ட பல்வேறு வகைககளில் டிக்கெட் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக கிரெடிட்,டெபிட் அட்டைகள், ஜிபே ஸ்கேனர்பயன்படுத்தி டிஜிட்டல் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவுப் பகுதிகளில் உள்ள ஸ்கேனர்களில் இதற்கேற்ப தொழில்நுட்ப மாற்றம் செய்யப்படும். அதில், வங்கி அட்டைகளை காண்பித்து புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம், சென்றடையும் மெட்ரோ ரயில் நிலையத்தை தேர்வு செய்து, அதற்கான கட்ட ணத்தை செலுத்தலாம்.
ஸ்கேனர் வசதி: இந்த முறைப்படி, பயணத்துக்கான கட்டணம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும். அதுபோலவே, Gpay முறையில், ஸ்கேனர் வாயிலாகவும் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம். புதிய வசதிக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று கொண்டிருப்பதால், இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்" என்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications