Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை -பெங்களூர் பயணம்.. சொந்த காரில் செல்லும் போது.. இப்படி செய்தால் பணம் நிறைய மிச்சமாகும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனமரத்தில் நெறிகட்டும் என்ற பழமொழி உண்டு. அதுபோல் பெங்களூரில் பெட்ரோல் விலை உயர்வு, சென்னை -பெங்களூர் இடையே இனி ஐடி ஊழியர்கள் சொந்த வாகனங்களில் செல்வோரின் திட்டத்தையே அடியோடு மாற்றி உள்ளது.

இந்தியாவின் சிலிக்கான் வேலியும், இந்திய ஐடி உலகின் தலைநகருமான பெங்களூர் நகருக்குக்கும், ஆட்டோமொபைல், துறைமுகம் மற்றும் ஐடி உலகின் நகரமான சென்னைக்கும் இடையே அடிக்கடி பயணிப்பவர்கள் இரண்டு துறையினர். ஒன்று ஐடி ஊழியர்கள். இன்னொன்று ஆட்டோமொபைல் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள்.

Bangalore petrol Chennai IT employees

மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கும் இந்த இரண்டு நகரங்களுமே 21ம் நூற்றாண்டின் தகவல் தொழில்நுட்ப புரட்சியால் தனித்துவமாக வளர்ந்துள்ளன. சென்னை- பெங்களூர் இடையே தூரம் என்று பார்த்தால் 347 கிமீ தூரம் வரும். சுமார் 6 முதல் 6.30 மணி நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூர் போய்விட முடியும்.

அதேநேரம் போக்குவரத்து நெரிசல் ஏதும் இல்லாத நேரம் என்றால் வெறும் 5.30 மணி நேரத்தில் போய்விட முடியும். இதனால் ஐடி ஊழியர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுவோர் விமானத்தில் செல்வதை விட சொந்த வாகனங்களில் பயணிப்பதையே அதிகம் விரும்புகிறார்கள்.

தென்னிந்தியாவில் மிகவும் பிஸியான அதேநேரம் பணக்கார நகரங்களை இணைக்கும் இந்த சாலை எப்போதுமே நெரிசல் என்பதால், ஸ்ரீபெரும்புதூர் முதல் பெங்களூர் வரை ஆந்திரா வழியாக புதிய எக்ஸ்பிரஸ் சாலை ரெடியாகி வருகிறது. இந்த சாலை திறக்கப்பட்டால் பயண நேரம் 4 மணி நேரத்திற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரி விஷயத்திற்கு நேராக வருவோம். பெட்ரோல் விலை மாற்றம் சென்னை பெங்களூர் இடையே சொந்த வாகனங்களில் பயணிக்கும் ஐடி ஊழியர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் கர்நாடகா அரசு பெட்ரோல் விலைக்கான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்தியது. இந்த விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலை பெங்களுரில் ஒரு லிட்டர் 102.86 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலை Rs.88.94 ஆக தொடர்ந்து இருக்கிறது. முன்பு 99 ரூபாய் 84 காசுகளாக இருந்த பெட்ரோல் விலை பெங்களூரில் நேற்று ஒரே நாளில் மூன்று ரூபாய் கூடி 102.86 ஆக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக சென்னை பெங்களூர் இடையே ஐடி ஊழியர்கள் உள்பட சொந்த வாகனங்களில் பயணிப்பவர்கள் தற்போது சென்னையில் டேங் பில் செய்கிறார்கள். அதேநேரம் டீசல் வாகனங்களாக இருந்தால் பெங்களூரில் டேங்க் ஃபில் பண்ணுவதுமாக உள்ளார்கள். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வருவோரும் சரி, சென்னையில் இருந்து பெங்களூர் செல்பவர்களும் சரி, சென்னையில் தான் பெட்ரோல் நிரப்புவார்கள். சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 100.75 ஆக உள்ளது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெட்ரோல் விலை பெங்களூருக்கு ஈடாக 102 என்கிற அளவில் உள்ளது. இதனால் ஒசூரில் பெட்ரோல் போட்டுக்கொண்டு பெங்களூர் போவதில் லாபம் இல்லை. இதேபோல் வேலூர் மாவட்டத்திலும் பெட்ரோல் விலை அதிகமாகவே உள்ளது.

அதிகபட்சமாக காஞ்சிபுரத்திற்குள் பெட்ரோல் போட்டால் தான் லாபம் என்பதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குள் மட்டுமே பெங்களூர் செல்வோர் இனி பெட்ரோல் நிரப்ப வாய்ப்பு உள்ளது. அதேபோல் டீசல் கார் மற்றும் டீசலில் ஓடும் கனரக வாகனங்கள் கண்டிப்பாக பெங்களூரில் இருந்து கிளம்புகிறார்கள் என்றால், பெங்களுரிலேயே டேங்க் ஃபில் பண்ண அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சென்னையில் டீசல் விலை ரூபாய் 92.34 ஆக உள்ளது.

கிருஷ்ணகிரியில் டீசல் விலை ரூபாய் 94.39 ஆக உள்ளது. ஆனால் பெங்களூரில் டீசல் விலை Rs.88.94 ஆக உள்ளது. எனவே தான் பெங்களூரில் இருந்து வரும் டீசல் வாகனங்கள் அங்கேயே டேங்கை ஃபில் பண்ண அதிக வாய்ப்பு உள்ளது. சென்னை பெங்களூர் இடையே ஐடி ஊழியர்கள் உள்பட சொந்த வாகனங்களில் பயணிப்பவர்கள் இப்படி டேங்கில் பெட்ரோல் டீசலை முழுமையாக நிரப்பினால், லிட்டருக்கு 3 ரூபாய் லாபம் கிடைக்கும். அதாவது சென்னை பெங்களூர் இடையே 800 கிலோ மீட்டர் சென்று வருகிறார்கள் என்றால், கணிசமான பணம் மிச்சமாகும் வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+