முதன்முறையாக.. நாட்டிலேயே டிரைவரே இல்லாத மெட்ரோ ரயில்.. சென்னையில் எப்போ வருது தெரியுமா? குட்நியூஸ்
சென்னை: 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 பெட்டிகள் கொண்ட 138 ரயில்கள் இயக்கப்படுகிறது... இதுகுறித்து மெட்ரோ நிறுவன அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது...

அன்று முதல் இன்றுவரை, சென்னையில் மெட்ரோ ரயில்களின் தேவை அதிகரித்தபடியே வருகிறது. அதனால்தான், மெட்ரோ சேவையின் விரிவாக்கமும் துரிதமாகி வருகிறது.
அறிமுகம்: தற்போது 63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடந்து கொண்டிருக்கின்றன... மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம் பெற போவதாகவும், இதில் 3 நிலையங்கள் மிக தாழ்வாக அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில்தான், 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. இது வரப்போகும் 2025ம் ஆண்டு ஆகஸ்டு முதல் இயக்கப்பட உள்ளது உள்ளதாகவும், 3 பெட்டிகள் கொண்ட 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் கூறியிருப்பது மிகப்பெரிய ஆர்வத்தை கிளப்பி வருகிறது.
3 பெட்டிகள்: மாதவரம் முதல் சிப்காட் (காரிடார் 3), லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (காரிடார் 4) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (காரிடார் 5) காரிடர்களுக்கு இந்த டிரைவரில்லாத மெட்ரோ ரயில்கள் வாங்கப்பட உள்ளது.
இந்த ரயில்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஜிபிஎஸ், சிக்னல் ரீடிங், டைமிங் சீகுவென்ஸ் ஆகிய பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 1 மாதத்தில் இந்த ரயில்கள் தயார் செய்யப்பட்டுவிடும் என்றும் , ஒரு வருட சோதனைகளுக்கு பிறகே பொது பயன்பாட்டிற்கு தயாராகும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
பூந்தமல்லி: அதாவது, பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே இயக்கப்படும் ஓட்டுனர் இல்லாத 26 ரயில்களின் முதல் பேட்ச் அடுத்த ஆண்டு மத்தியில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதன் முதலாக ஓட்டுநர் இல்லாத ரயில் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதுடன், அதிநவீன வசதிகளுடன் வரப்போகும் இந்த மெட்ரோவானது, ஆகஸ்ட் மாதமே வரப்போவதும், மிகுந்த எதிர்பார்பபை பயணிகளிடம் ஏற்படுத்தி வருகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications