ஆடுகள் வளர்க்க ஆசையா? நாட்டுக்கோழி, பன்றி பண்ணை அமைக்க 50% மானியம்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்
அரியலூர்: மத்திய அரசு நம் நாட்டு கால்நடை விவசாயிகள் வாழ்வாதாரம் உயருவதற்கும் அவர்களின் பொருளாதார தரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பான உதவிகளை செய்து வருகிறது.. அந்த வகையில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் உள்ளூர் வங்கிகளோடு இணைந்து ஒரு முக்கிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.. தற்போது அரியலூர் மாவட்டத்தில் இருந்தும் அதுகுறித்த முக்கிய செய்தி வெளியாகி உள்ளது.
கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி (AHIDF) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.. மத்திய அரசின், தேசியக் கால்நடை ஆணையத்தின் கீழ், கால்நடை வளர்ப்புக்காக சிறப்பு மானியமும் வழங்கப்படுகிறது.

ஆடுகள் வளர்க்க ஆசையா
தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை இந்த திட்டத்தை மிக சிறப்பாக கால்நடை விவசாயிகளிடம் கொண்டு சென்று வருகிறது..
மத்திய அரசின் தேசிய கால்நடை ஆணையத்தின் கீழ் கால்நடை வளர்ப்புக்காக சிறப்பு மானியங்கள் வழங்கப்படுகின்றன.. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் கோழி வளர்ப்பு வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு பன்றி வளர்ப்பு தீவனம் மற்றும் தீவன பயிர் சேமிப்பு போன்ற பணிகளில் ஈடுபடும் தொழில் முனைவோரை உருவாக்குவதே ஆகும்..
குறிப்பாக நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க 25லட்சம் ரூபாய் வரையிலும் செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணை அமைக்க 10 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது.. அதே போல் பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க பதினைந்து லட்சம் முதல் முப்பது லட்சம் ரூபாய் வரை நிதி உதவி கிடைக்கிறது..
சேமிப்பு வசதிகள்
இந்த திட்டத்தின் கீழ் தீவன சேமிப்பு வசதிகள் வைக்கோல் மற்றும் ஊறுகாய்புல் பாதுகாப்பு போன்ற கட்டமைப்புகளை உருவாக்கவும் மானியம் உண்டு..
மொத்த திட்ட செலவில் 50 சதவீதம் வரை மானியமாக வழங்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.. தனி நபர்கள் சுயஉதவி குழுக்கள் விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு விவசாய கூட்டுறவுகள் மற்றும் கூட்டு பொறுப்பு சங்கங்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்..
வங்கி கடன் - 2 தவணை மானியம்
பயனாளிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க சொந்தமாக நிலம் வைத்திருக்க வேண்டும் அல்லது குத்தகைக்கு நிலம் வைத்திருக்க வேண்டும்.. மேலும் வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை முறையாக பெற்றிருக்க வேண்டும்..பணிகள் நிறைவு பெறுவதை பொறுத்து மானிய தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும்..
அந்தவகையில் அரியலூர் மாவட்டத்தில் இருந்தும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த திட்டத்தின் கீழ் பண்ணைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
அரியலூர் மாவட்ட விவசாயிகள்
விருப்பமுள்ளவர்கள் இதற்காகவே உள்ள வெப்சைட் முகவரியில் சென்று தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.. கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர் தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.. எனவே அரியலூர் மாவட்ட விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
இந்த திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு கால்நடை வளர்ப்பில் நவீன முறைகளை புகுத்தவும் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது..!!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications