ரேஷன்தாரர்களுக்கு சர்ப்ரைஸ்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் நிம்மதி.. இதுதான் மோடி.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலவச ரேஷன் பொருட்கள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இது நாட்டு மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு ரேஷன் கடைகள் மூலமாக, மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவு பொருட்கள் மத்திய, மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.. இதைத்தவிர, கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக உணவுப் பொருட்கள் 2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றன..

Super Surprise for Ration Card Holders and Good news given by PM Modi about Ration things under Pradhan Mantri Garib Kalyan Yojana

மத்திய அரசு: அதாவது, கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்காகவே, மத்திய அரசு, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.. அப்போது முதல் இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன...

மானிய விலை உணவு தானியத்துக்குமேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பல குடும்பங்கள் ரேஷன் கடை சலுகைகளையே நம்பி உள்ளதால், இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டமானது, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது..

ரேஷன்கார்டுகள்: எனினும், இந்த ரேஷன் கார்டுகளை சிலர் தவறாக பயன்படுத்தி, முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது தெரியவருகிறது.. அதனால்தான், தகுதியில்லாத ரேஷன் கார்டு பயனாளிகளின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு சமீப காலமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் பலரது ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.. பட்டியலிலிருந்து தகுதியில்லாதவர்களின் பெயர்களும் கார்டிலிருந்து நீக்கப்பட்டும் வருகின்றன.

அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கை இல்லை என்றாலும் பல்வேறு மாநிலங்களில் இந்த விதிமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது.. நிறைய பேர், வேறொரு மாநிலத்தின் வசிப்பிட சான்றிதழை தானாகவே உருவாக்கி ரேஷன் கார்டு மூலமாக பொருட்கள் வாங்கிவந்திருக்கிறார்களாம்.

அட்டைதாரர்கள்: சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் மொத்தம் 9500 பேர் சிக்கியிருந்தார்கள். இருப்பிட சான்றிதழ்களை தயார் செய்து, அதை வைத்து, ரேஷன் கார்டுகளை வாங்கியிருக்கிறார்கள்.. இதுபோன்றவர்களால், தகுதியிருக்கும் பல அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை பெறமுடியாமல் போகிறது..

எனவேதான் தகுதியில்லாத குடும்பங்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளும் கெடுபிடி காட்டி வருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்திலும், 40,000 குடும்பங்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன..

கெடுபிடிகள்: எனினும், கார்டுகளை இப்படி திடுதிப்பென்று ரத்து செய்துவிடுவதால், பல குடும்பங்கள் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. எனவேதான், பஞ்சாப்பில் ரத்து செய்யப்பட்ட 40,000 ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரேஷன் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, மத்திய அரசின் இந்த இலவச ரேஷன் திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது.. ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களை மறுபடியும் சேர்க்க மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது..

செம சான்ஸ்: ஒருவேளை உங்களுடைய ரேஷன் கார்டில் இருந்து உங்கள் பெயரையும் நீக்கியிருந்தாலும், கோதுமை, அரிசி, தானியங்கள் போன்ற ரேஷன் உதவிகள் இனி உங்களுக்கும் கிடைக்குமாம்.. உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசின் ரேஷன் கார்டு பட்டியலில் உங்கள் பெயர் விரைவில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? ரேஷன் கார்டு பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்க்க அருகில் உள்ள உணவு வழங்கல் துறைக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களின் நகல்களையும் இணைத்து தந்தாலே போதும்.. உங்கள் பெயர் மறுபடியும் சேர்க்கப்பட்டுவிடும்.

மக்கள் மகிழ்ச்சி: மத்திய அரசு பிறப்பித்திருக்கும் இந்த உத்தரவானது, பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. அத்துடன், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், இப்படியொரு அறிவிப்பு மத்திய அரசுக்கு மிகுந்த பலனை மக்களிடம் பெற்றுத்தரும் என்றும் நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+