"மிஞ்சிட்டாரே" கலைஞர்.. முட்டிக்கிட்டு வந்த அழுகை.. "மாமா என் தோளை தொட்டு".. பூரித்த துர்கா ஸ்டாலின்
சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியை பற்றி, துர்கா ஸ்டாலின், சில நினைவுகளை பூரித்து அதில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதை பார்த்த திமுகவினர், கலைஞரின் குணம் இப்படிப்பட்டதா? என்று நெகிழ்ந்து போய் அந்த வீடியோவை வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்..
சமீபகாலமாகவே, நாயகி என்ற யூடியூப் சேனல் மக்களிடம் பிரபலமாகி வருகிறது.. பத்திரிக்கையாளர் லோகநாயகி, துர்கா ஸ்டாலினை பேட்டி எடுத்து இதில் ஒளிபரப்பி வருகிறார்.

இந்த வீடியோ பேட்டிகளின்போது, துர்கா ஸ்டாலின் மனம்திறந்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.. குறிப்பாக, பூஜை அறை உட்பட அனைத்தையுமே துர்கா இதில் விரிவாக எடுத்து கூறியிருந்தார்.
மாடர்ன் கிச்சன்: தன்னுடைய வீட்டின் கிச்சனையும் அந்த வீடியோவில் விலாவரியாக நேயர்களுக்கு காட்டினார் துர்கா.. அந்த கிச்சனை பார்த்தவர்கள் நிஜமாகவே ஆச்சரியப்பட்டு போனார்கள்.. காரணம், அந்த கிச்சன் இப்போது இருக்கும் மாடர்ன் கிச்சனை போல இல்லாமல், பழமை நிரம்பி காணப்பட்டது.. அடுக்களையில் மண்பானை, அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவைகள் நிரம்பியிருந்தன.. அப்போதுதான் துர்கா, தன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த மீன்குழம்பு சமைத்து கொண்டிருந்தார்.. மீன்குழம்பு மீதமாகிவிட்டால், அதை ப்ரிட்ஜில் எடுத்து வைத்துவிடுவாராம்..
மீன்குழம்பு: இதை பார்த்ததுமே இணையவாசிகள், "முதல்வர் வீட்டிலும் பழைய மீன் குழம்பு பிரிட்ஜில் வைக்கிறாங்களே.. தேன் வாங்கிய பாட்டிலை பிற விஷயத்திற்கு யூஸ் பண்றாங்களே" என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. அத்துடன், இவையாவும், பெண்களிடம் நிறைய ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறது.. அடடா, மிஞ்சி போன இட்லி மாவையும் use பண்றாங்களே.. சி.எம் வீட்ல கூட மத்தியானம் மிச்சமான குழம்ப நைட்டுக்கு வெச்சிக்குறாங்களே.. என்று ட்வீட்களை பதிவிட்டு, அதை ஷேர் செய்தும் வருகிறார்கள்... மொத்தத்தில் துர்கா வீட்டு கிச்சன், இல்லத்தரசிகளிடம் பெருத்த மாற்றத்தையும், வரவேற்பையும் பெற துவங்கிவிட்டது..!!
அதுபோலவே இப்போதும், இதே சேனலில் ஒளிபரப்பாகியுள்ள, துர்கா ஸ்டாலினின் மற்றொரு வீடியோவை திமுகவினர் ஷேர் செய்து வருகிறார்கள்.. மறைந்த முதல்வர் கருணாநிதியின் குணத்தை பற்றி அதில் நெகிழ்ந்து பகிர்ந்து கொண்டுள்ளார் துர்கா ஸ்டாலின்.. குறிப்பாக, "வாழ்க்கையின் மிகப்பெரிய விஷயங்கள், நாம் உணராமலேயே தினசரி கடமையை நாம் செய்து கொண்டிருப்போம்.. அப்படித்தான், 1976, ஜனவரி 31ம் தேதி, என் வாழ்க்கையில் பேரலை ஒன்று, என்னை நோக்கி வந்தது. நான் அப்போதெல்லாம் விளையாட்டுத்தனத்துடன் ஜாலியா இருந்தேன்..
ரவா தோசை: நியூ உட்லான்ஸ் ஓட்டலில் நானும் காந்தி அக்காவும் ரவா தோசையை வரவழைத்து சாப்பிட்டுவிட்டு, சேலையில் எம்பராயிடரி டிசைன் போட்டுக்கொண்டு இருப்போம்.. அன்றும் அப்படித்தான் எம்பராயிடரி முடித்துவிட்டு படுத்து தூங்கினேன்.. மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது, கோபாலபுரத்தின் வீட்டின் நிலைமையே மாறியிருந்தது.. கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. திமுக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது..
ஆனால், அதன்பின்விளைவுகள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.. அப்போது, என்னை வீட்டில் இருந்த அனைவருமே கலங்கிய பார்வையுடன பார்த்தார்கள்.. ஏதோ விபரீதம் இருப்பது போலவே எனக்கு தோன்றியது.. திமுகவை சேர்ந்தவர்கள் கைதாகி கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலும் வந்தது.. என் வீட்டுக்காரரையும் கைது செய்ய போலீசார் வெளியே காத்திருக்கிறார்கள்.. மாறன் அண்ணனையும் கைது செய்ய போலீஸ் காத்திருந்தார்கள்.. ஆனால், இதை என்னிடம் சொல்ல பயந்து, தயங்கி தயங்கி குடும்பத்தினர் நின்றிருந்தார்கள்.. எனக்கோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது..
மாமா கலைஞர்: அப்போதுதான், என் தோளை தோட்ட மாமா கலைஞர், "ஒன்னும் கவலைப்படாதே சாந்தா.. 4 நாளில் விட்ருவாங்க.. ஊருக்கெல்லாம் போனால், நாலைந்து நாள் பிரிந்திருக்கிற மாதிரி இருக்குமே, அப்படி நினைச்சுக்கோ" என்று சமாதானம் செய்தார்.. நான் தலையை ஆட்டினேன்.. அதுதான் கலைஞர் மாமா என்னிடம் முதல்முறையாக பேசியது..
என் வீட்டுக்காரர் வந்ததுமே, உன்னை தேடி காவல்காரங்க வந்திருக்காங்க..ப்பா என்று சொன்னார்.. அப்போது மாமாவும் கண்கலங்கினார்.. பொதுவாக அவர் எதுக்குமே கலங்க மாட்டார்.. ஒவ்வொரு தேர்தலின்போதும், ரிசல்ட் வரும்போது, ஹாலில் குடும்பத்தினர் அனைவரும தவிப்போடு இருப்போம்.. திமுகவுக்கு தோல்வி என்றால், நாங்கள் அப்செட் ஆகிவிடுவோம்.. சுணங்கிவிடுவோம்..
சீனியர் அரசியல்வாதி: ஆனால், மாமா மட்டும் "சரி, சரி, வாங்க.. சாப்பிட என்ன இருக்கு" என்று கேட்டு அடுத்த வேலைக்கு போயிடுவார்.. அந்த தோல்வியை எளிதாக சமாளிச்சிடுவார்.. இவரால் மட்டும் எப்படி இவ்வளவு எளிதாக எடுத்துக்க முடியது? என்று எனக்கு தோன்றும்.. ஆனால், அப்படி எளிதாக எடுத்துக்கிட்டதால்தான், சீனியர் அரசியல்வாதியாக இத்தனை காலம் நிலைத்திருக்க முடிகிறது" என்பன உட்பட மேலும் பல்வேறு தகவல்களை அதிர் பகிர்ந்து கொண்டுள்ளார் துர்கா ஸ்டாலின்.. இந்த வீடியோவை திமுகவின் உடன்பிறப்புகள் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications