சூப்பர் ஸ்டார் பட்டம்.. சீண்டலா? விஜய் போட்ட பாதையில் பயணிக்கிறாரா ரஜினி .. நெல்சன் சேவியர் அலசல்
சென்னை: சினிமா அரசியலோ ரோலர் கோஸ்டர் போலத்தான். யார் உச்சத்திற்கு போவார்கள்.. யார் கீழே இறங்குவார்கள் என்று கணிக்க முடியாது. அரசியலுக்கு வர மாட்டேன் என்று உறுதியாக சொன்ன ரஜினிகாந்த். ஜெயிலர் பட பாடல் வரிகள் மூலம் அடுத்த தலைமுறை நடிகர்களை சீண்டுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ள நிலையில் ஒன் இந்தியாவின் அரசியல் யூ டுயூப் சேனலின் எக்ஸிகியூடிவ் எடிட்டர் நெல்சன் சேவியர் தனது கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜெயிலர் படத்தைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது அந்த படத்தின் பாடல்கள். தமன்னா ஆடிய காவாலா ஒரு ரகம் என்றால், ஹூக்கும் மற்றொரு ரகம். ரஜினிக்காகவே ஒவ்வொரு வரியும் செதுக்கப்பட்டுள்ளது. சூப்பர் சுப்பு எழுதியுள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். பாடல் வரிகள் அனைத்துமே ரஜினி ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் தகர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார். அரசியலில் சில விமர்சனங்கள் வரும் போது கீழ் மட்டத்தில் உள்ள தொண்டர்கள், நிர்வாகிகள் பேசுவார்கள். அதே நேரத்தில் தலைவர்கள் யாரும் அப்படி பேச மாட்டார்கள். என்கிறார் நெல்சன் சேவியர்.
"ஒன் அலும்ப பாத்தவன்.. உங்கொப்பன் விசில கேட்டவன்.. ஒன் மவனும் பேரனும்.. ஆட்டம் போட வைப்பவன்
இவன் பேர தூக்க நாலு பேரு.. பட்டத்த பறிக்க நூறு பேரு..குட்டி செவுத்த எட்டி பார்த்தா.. உசுர கொடுக்க கோடி பேரு" திரும்ப திரும்ப வைக்கப்பட்டுள்ள இந்த வரிகள் விஜய் ரசிகர்களை சீண்டி பார்த்துள்ளது.

சினிமாவில் விஜய் அஜீத் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால் அதையும் கடந்து விட்டனர். ஆனால் நடிகர்கள், கலைஞர்கள் அதை பேசக்கூடாது. பாடல் வரிகளை தவிர்த்து இருக்க வேண்டும். சினிமா விளம்பரத்திற்காக அதை வைத்திருந்தாலும் சரி அதை தவிர்த்து இருக்க வேண்டும் என்கிறார் நெல்சன் சேவியர்.
ரஜினிக்கு மிகப்பெரிய மாஸ் வெற்றிப்படங்கள் எதுவும் சமீபத்தில் இல்லை. அவர் நடித்த சில படங்களை பார்ப்பதற்கு அவரது ரசிகர்களுக்கே சோர்வை கொடுத்தது. எனவே ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக எழுதப்பட்ட பாடலை ஏன் விஜய் உடன் தொடர்பு படுத்த வேண்டும் என்று கேட்டாலும் சமூக வலைத்தளங்களில் சண்டை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதை ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி கூட, நான் பட்டம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் இயக்குநர்தான் இது முழுக்க முழக்க ரசிகர்களுக்காக எழுதப்பட்டு என்று சொன்னார். விஜய் ரசிகர்கள் ஏன் தானாக வந்து சமூக வலைத்தளங்களில் சண்டை போடுகின்றனர்.
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்பது ரஜினிக்கு தெரியாதா? என்று கேட்ட நெல்சன், யாருடைய படம் அதிக விற்பனையாகிறது? இன்னும் சில ஆண்டுகளுக்கு யார் கையில் சினிமா துறை இருக்கும் என்று நன்றாகவே தெரியும். இது ரஜினி விஜய் சண்டையாக நகர்வது ஆரோக்கியமான விசயமல்ல.
இது சினிமா தாண்டாக ஒன்றாக உள்ளது.
விஜய் வளர்ச்சியை ரஜினியால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லலாம். 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிக்கு இருந்த டிமாண்ட் தற்போது விஜய்க்கு உள்ளது. அதை ரஜினி நன்றாக உணர்ந்து இருக்கிறார். விஜய் அரசியலுக்கு தீனி போடுவது போலவே நடந்து கொண்டிருக்கிறார். ரஜினியின் பாதையிலேயே விஜய் பயணம் செய்கிறார். இது விஜய்க்கு எதிராக எழுதியது போல தெரியவில்லை. பீஸ்ட் படம் பற்றிய பேச்சின் போது ரஜினிகாந்த் சொன்னதை கேட்டு கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. அதைக்கேட்டு ரஜினியே சில நொடிகள் பேச்சை நிறுத்திட்டார். அதுதான் உற்று நோக்கப்படுகிறது.
ரஜினிகாந்த் தனது பல படங்களில் பல பாடல்களை வைத்துள்ளார். ஆனால் ஜெயிலர் படத்தில் வைக்கப்பட்ட பாடல் திட்டமிட்ட ஒன்று அல்ல என்று அவரே சொன்னாலும் கூட அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கிறது. சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தற்போது ரஜினியின் கைகளில்தான் இருக்கிறது. அந்த பட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். இது படத்திற்காக புரமோசனுக்காகவே வைக்கப்பட்டது என்றுதான் கருத வேண்டும்.
பொதுவாகவே படத்தின் வெற்றி விழாக்களில்தான் ரஜினிகாந்த் அதிகம் பேசுவார். அதுவே சர்ச்சையாகும். விஜய்தான் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் பேசுவது சர்ச்சையாகும். இப்போது புதிதாக ரஜினிகாந்த் தனது ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார். இதை பார்க்கும் போது விஜய் போட்ட பாதையில்தான் ரஜினிகாந்த் பயணிப்பது போல உள்ளது என்றும் நெல்சன் சேவியர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் எப்போதுமே ரொம்ப சீனியர் நடிகர். அவரை ஒரு பெரிய இடத்தில் இருக்கிறார். விஜய் அரசியலுக்கு வருவது எல்லோரையுமே ஒரு பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் என்றும் நெல்சன் சேவியர் கூறியுள்ளார்.
-
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications