செந்தில் பாலாஜிக்கு பெரிய சிக்கல்.. 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுக்க.. உச்ச நீதிமன்றம் அனுமதி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது. அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்ற காவலில் கொண்டு செல்லப்பட்டு விட்டார்.

நீதிமன்ற காவலுக்கு போன பின் அது எப்படி சட்ட விரோத கைதாக இருக்கும். நீதிமன்ற காவல் என்பது ஒரு கைதை அதிகாரபூர்வமாக்கிவிடுகிறது. அதனால் அவர் கைது செய்யப்பட்டது தவறு என்று சொல்ல முடியாது. அதோடு அவருக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவும் செல்லாது.
இதனால் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை இன்றி கூறி செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக உயர் நீதிமன்றம் இதேபோல 8 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. ஆனால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்ததால் அமலாக்கத்துறை காவலில் அவரை எடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் மருத்துவமனையில் இருந்த நாட்களை விசாரணை நாட்களாக கருத கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி வரும் 12ம் தேதி வரை செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவார்.
வழக்கு வாதம்: செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் வைத்தார்.
அதில், அமலாக்கத்துறை என்பது போலீஸ் கிடையாது. அவர்களுக்கு இருக்கும் கைது அதிகாரம் என்பது வேறு மாதிரியானது. மணி லாண்டரி செய்து இருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும். மணி லாண்டரி என்பது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது. அதாவது அழுக்கு துணியை மிஷினில் போட்டு துவைப்பது போன்றது.
பொதுவாக போலீஸ் ஒருவரை விசாரிக்கிறது என்றால்.. ஒரு நபர் குற்றம் செய்தவராக கருதப்பட்டால் அவரை விசாரிக்க முடியும். ஆதாரத்தை கண்டுபிடித்து விசாரிக்க முடியும். ஆனால் அமலாக்கத்துறை விசாரணை செய்ய, கைது செய்ய வேண்டும் என்றால்.. அதற்கு முதலில் ஆதாரம் வேண்டும்.
கைக்கு ஆதாரம் வந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஆதாரத்தை திரட்டுவதற்காக ஒருவரை கைது செய்து அதன்பின் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சக்தி கிடையாது. ஆனால் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் எதோ போலீஸ் போல இதில் கைது செய்துவிட்டு ஆதாரத்தை கைப்பற்ற முடிவு செய்கின்றனர்..
நான் தவறு செய்தேன் என்று அவர்கள் கருதினால் கூட எனக்கு எதிராக ஆதாரம் இல்லாமல்.. ஆவணமாக ஆதாரம் இல்லாமல் அவர்களால் என்னை கைது செய்யவே முடியாது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் இப்படித்தான் கைது செய்துள்ளனர். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவரிடமே கூட சொல்லவில்லை, என்று வாதங்களை வைத்தார். ஆனால் இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications