Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுரோட்டில் மானத்தை வாங்கும் வண்டிகள்.. சர்ரென சரிந்த மைலேஜ்! எல்லாத்துக்கும் 'இது’ தான் காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டில் வாகனங்களுக்கு 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) கட்டாயமாக வழங்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக பல தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்திருந்தது. அந்த மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் இப்போது இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இந்நிலையில், 2023க்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் 20% எத்தனாலுக்கு பழக்கப்படாதவை என்பதால், மைலேஜ் குறைவு, இன்ஜின் பிரச்சினையை சந்திப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் வாகன ஓட்டிகள்.

எத்தனால் கலந்த பெட்ரோலை வழங்கும் திட்டத்தை முதலில் 2030-க்கே பிரதமர் மோரி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே 2023 ஏப்ரலில் மத்திய அரசு இதை அறிமுகப்படுத்தியது.

ஆரம்பத்தில் 5 சதவீதம், 10 சதவீதம் என கலப்பாக வந்த பெட்ரோல் இப்போது 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் தரப்பில் இந்த திட்டம் பல நன்மைகளைத் தரும் என பல காரணங்களைக் கூறி, கலப்பை அமல்படுத்த எண்ணெய் நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.

Ethanol Petro

எத்தனால் பெட்ரோல்

20 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோல் பயன்படுத்துவதன் மூலம் வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அளவு குறையும். அதே நேரத்தில் கார்பன் வெளியேற்றம் குறைந்து சூழல் பாதுகாப்புக்கும் உதவுமென மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பலமுறை விளக்கமளித்துள்ளார்.

இ20 பெட்ரோல்

ஆனால் பொதுமக்கள் பக்கம் வரும்போது பல கேள்விகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக 2023-க்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் E20-க்கு பொருந்தாது என்கிற குற்றச்சாட்டு வலுவாகிறது. வாகனங்களின் மைலேஜ் குறைகிறது, என்ஜின் ஆயுள் பாதிக்கப்படுகிறது, அதிக மெயிண்டனன்ஸ் செலவு வரக் கூடும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டருக்கு குறைந்தது 2 முதல் 3 கிலோமீட்டர் வரை மைலேஜ் குறைகிறது என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

பழைய வாகனங்கள்

மேலும், தற்போது இந்தியாவில் ஓடும் கோடிக்கணக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் பழைய கார்கள் இ20 பெட்ரோலை ஏற்றுக் கொள்ள முடியாது என்றே நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் அவற்றின் ஆயுள் குறைந்து விரைவில் பழுதாகி விடும் அபாயமும் இருப்பதாக மெக்கானிக்குகள் சுட்டிக்காட்டுகிறார்கள். எத்தனால் உற்பத்திக்கே அதிக செலவு வருவது, அதிக தண்ணீர் தேவைப்படுவது போன்ற சிக்கல்களும் விவசாயிகளிடம் இருந்து எழுகின்றன.

மத்திய அரசு

இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு திட்டத்தை விரைவாக முன்னெடுத்துவிட்டது என்ற குற்றச்சாட்டும் சமூக வலைதளங்களில் பரவுகிறது. அதோடு சில அரசியல்வாதிகளின் குடும்பத்தினர் எத்தனால் தொழிலில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், நுகர்வோர் விரும்பும் வகை பெட்ரோலை (E0, E10, E20) தேர்வு செய்ய வாய்ப்பு கொடுக்காமல், அரசு கட்டாயப்படுத்துவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

என்ஜின் பிரச்சனை

சுற்றுச்சூழல் நன்மையை காரணம் காட்டி அரசின் பக்கம் இந்த திட்டம் வலியுறுத்தப்பட்டாலும், பொதுமக்கள் அன்றாடம் வாழ்க்கையில் சிரமப்படுவதாகவே குரல்கள் அதிகரித்து வருகின்றன. உச்ச நீதிமன்றம் திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டிய நிலையில், இந்த விவாதம் நிறைவடையும் போக்கு இல்லை. அடுத்த சில மாதங்களில் இதன் தாக்கத்தை மக்கள் வாழ்க்கையில் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை மத்திய அரசு உணர வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+