ஜெயலலிதா மரணம்.. ஆறுமுகசாமி ஆணையம் தொடரலாம்.. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் தொடரலாம் என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், ஆணையத்திற்கு உதவ மருத்துவர்களைத் தேர்வுசெய்ய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அதற்கு முன்பு சுமார் 75 நாட்கள் வரை அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவின. இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இருப்பினும், ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி இந்த ஆணையத்தின் விசாரணைக்குத் தடைகோரிய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் தொடரலாம் என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், ஆணையத்திற்கு உதவ மருத்துவர்களைத் தேர்வுசெய்ய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த துறை சார்ந்த நிபுணர்களைப் பரிந்துரைக்க எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது மேலும், விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரிய அப்போலோவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுமட்டுமின்றி அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆணையம் விசாரிக்க விரும்பினால் விசாரிக்கலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications