உலக தரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டை கொண்டு வரலாம்.. சூப்பர் ஐடியா கொடுத்த சுப்ரியா சாகு!
சென்னை: உலக தரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டை கொண்டு வர சூப்பரான ஐடியா கொடுத்த தமிழக சுற்றுச்சூழல் துறையின் முதன்மை செயலாளரும் மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான (பொறுப்பு) சுப்ரியா சாஹூ.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது.
இதில் தங்கம், வெள்ளி, ரொக்கப் பணம் உள்ளிட்ட கணக்கில் வராதவை கைப்பற்றப்பட்டன. மேலும் இவர் வனத்துறை அதிகாரியாக இருந்த போது சந்தனமரங்களை பதுக்கி வைத்து அந்த மரத்தால் சில கலை பொருட்களையும் செய்து வைத்திருந்தார்.

விடுவிப்பு
இதையடுத்து அவர் விசாரணை வளையத்தில் இருப்பதால் அவர் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகு கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளராகவும் உள்ளார்.

டிவிட்டரில் ஆக்டிவ்
இவர் டிவிட்டரில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். வனவிலங்குகள் குறித்தும் அதன் வாழ்வியல் , சூழலியல் குறித்தும் அவ்வப்போது வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிடுவார். அது போல் வாயில்லா ஜீவராசிகளிடம் அன்பு செலுத்துவது குறித்தும் அறிவுறுத்துவார். அது போல் தமிழகத்தில் ஏதோ ஒரு ஊரில் வீட்டிற்கு வந்த நாகப்பாம்பு குட்டியை பெண் ஒருவர் தங்கமே, போடீ செல்லம் என கொஞ்சி வழியனுப்பி வைத்த சம்பவத்தை வைரலாக்கினார்.

நீலகிரி மாவட்டம்
இவர் ஏற்கெனவே இன்கோசர்வ் தலைமை செயல் இயக்குநராகவும் நீலகிரி மாவட்டத்தில் பதவி வகித்திருந்தார். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும் இவர் பணியாற்றினார். சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழித்தார். பிளாஸ்டிக்கால் வனத்திற்கும் நிலத்தடிக்கும் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தார்.

சென்னை மாநகராட்சி
இந்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி ஆகிய இணைந்து கோயம்பேட்டில் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று நடத்தியது. அதில் பிளாஸ்ட்டிக்கை அறவே ஒழிப்போம் எனும் கருப்பொருளை மையமாக வைத்து பிரச்சாரம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக சுற்றுச்சூழல் துறையின் முதன்மை செயலாளரும் , தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சுப்ரியா சாகு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மிகப் பெரிய மார்க்கெட்
இந்த நிகழ்ச்சியில் சுப்ரியா சாகு பேசுகையில், இந்தியாவில் மிகப் பெரிய மார்க்கெட்டாக கோயம்பேடு விளங்குகிறது. ஆசியாவிலேயே உலகிலேயே பிளாஸ்டிக் இல்லாத மார்க்கெட்டாக கோயம்பேட்டை ஏன் மாற்றக் கூடாது? இதற்காக முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனையின் பேரில் உங்கள் அனைவருக்கும் உறுதுணையாக அரசு இருக்கும் என கூறினார். இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் கடைக்காரர்களுக்கு சணலாலான பைகளை கொடுத்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications