வைல்டு கார்டில் சென்றால் வச்சு செய்வேன்.. செல்லாவிட்டாலும் "இதை" செய்வேன்.. சுரேஷ் சக்ரவர்த்தி
சென்னை: மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் எல்லோரையும் வச்சி செய்வேன் என சுரேஷ் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் மிகவும் சவாலான போட்டியாளராக இருந்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை அனிதா சம்பத்திடம் சண்டையிட்டு கொண்டிருந்தார்.
அது போல் பாலா தனது மகன் போல் நினைத்ததால் அவரிடம் அன்பாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரும் அனிதா சம்பத்தும் இணைந்து ஏய் ஏய் சின்ன மச்சான் பாடலுக்கு கலக்கல் நடனமாடினார்கள்.

கேப்ரி
இருவரும் பாடலை உள்வாங்கி ஆடியது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. அதிலும் சுரேஷ் சக்ரவர்த்தி இந்த வயதிலும் ஆடியது கண்களுக்கு விருந்தாகவே இருந்தது. இவர் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவரை தாத்தா தாத்தா என அழைத்த கேப்ரி அழுதார். அது போல் அர்ச்சனாவும் கண்ணீர் விட்டார்.

ரசிகர்கள்
இவர் வெளியேறியதற்கு பின்னால் ஏதேனும் சூழ்ச்சி நடந்திருக்கலாம் என ஒரு சிலர் சந்தேகத்தை கிளப்பினார்கள். இந்த நிலையில் அவர் யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் ரசிகர்கள் ஏராளமான கேள்விகளை கேட்டனர்.

அளவு
அதில் கடந்த சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக வனிதா சென்றது போல் உங்களை அழைத்தால் நீங்களும் செல்வீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி கூறுகையில் கண்டிப்பாக செல்வேன். நீங்கள் என் மீது இந்த அளவுக்கு அன்பு வைத்திருப்பீர்கள் என நினைக்கவில்லை.

சுரேஷ் சக்ரவர்த்தி
ஆனால் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் எல்லோரையும் வச்சி செய்வேன். இனி தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்ய முடிவு செய்துள்ளேன் என சுரேஷ் சக்ரவர்த்தி தெரிவித்தார். இதனால் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே போல் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியேயும் நிகழ்ச்சி களைகட்டும் என தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications