Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. வீடுகளில் இபி பில் அடியோடு மாறபோகுது.. ஸ்மார்ட் மீட்டர் வருதா? சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் மிகமிக துல்லியமாக மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஆளில்லாமல் தொலைத்தொடர்பு வசதியுடன் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதற்கு பிறகு, ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு, மீண்டும் டெண்டர் கோருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

நம்முடைய தமிழக மின்சார வாரியத்தை பொறுத்தவரை, மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது..

TNEB electricity board smart meter

அதன்ஒருபகுதியாக, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்தினால், வெளிப்படைத்தன்மை ஏற்படும என்பதுடன், செலவினங்களும் குறையும் என்று கணக்கு போடப்பட்டது. இதற்காகவே, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான டென்டரும் அறிவிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

டெண்டர்கள் அடுத்தடுத்து ரத்து

முதல்கட்டமாக, 25,000 தொழில் நிறுவனங்களில், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த போவதாகவும், சிம் கார்டு வாங்குவதுடன், மென்பொருள் தயாரிப்பு பணியிலும் அரசு ஈடுபட்டு வருவதாகவும் கடந்த வருடம் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத்துறை திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய 2023ம் ஆண்டு தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் நான்கு தொகுப்புகளாக டெண்டர்கள் வெளியிடப்பட்டது. இதில் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய முதல் தொகுப்புக்கான டெண்டரை AESS நிறுவனம் எடுத்தது. ஆனால், இந்த ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டது. மற்ற 3 தொகுப்புகளுக்கான டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டது.

டெண்டர் கோரியது

இதையடுத்து, ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரானது மீண்டும் விடப்படும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்திருந்தது. கடந்த மாதம், சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மின் வாரிய இயக்குனர்கள் குழு கூட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு, மீண்டும் டெண்டர் கோருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.. இதையடுத்து, ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு, விரைவில் டெண்டர் கோரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டருக்காக டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து ஸ்மார்ட் மீட்டர் பணிகள் அமைக்கும் பணிகள் வேகம் எடுத்துள்ளது.

ஸ்மார்ட் மீட்டர் செயல்பாடுகள் - நன்மைகள் என்ன?

ஸ்மார்ட் மீட்டரை பொறுத்தவரை, மாதந்தோறும் கணக்கெடுக்கும் தேதி, சாப்ட்வேர் வடிவில் அப்லோடு செய்யப்பட்டு, தொலைதொடர்பு வசதியுடன், அலுவலக, சர்வரில் இணைக்கப்படுவதால், குறிப்பிட்ட தேதி வந்ததுமே, தானாகவே கணக்கெடுத்து, நுகர்வோருக்கு கட்டணம் அனுப்பப்பட்டுவிடும்.,,

இதற்காகவே, 4ஜி அலைவரிசையில் இயங்கும் வகையில் சிம்கார்டு வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.. மின் கணக்கீட்டுக்கு புதிய சாப்ட்வேர்களும் தயாரிக்கப்படுகின்றன. சிம்கார்டு மூலமாக கிடைக்கும் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தி மாதந்தோறும் ஆளில்லா மின்பயன்பாடு கணக்கு எடுக்கப்படும்.

இதற்கு ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது.. கட்டண விவரம் sms மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்பட்டுவிடும்.. இதற்கு மின் கணக்கீட்டாளர்களே தேவையில்லை...

மின்சாரம் திருட்டை தடுத்தல், மின்சார பயன்பாட்டை ஒரே இடத்தில் இருந்து கணக்கீடு செய்தல், வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் போன் கூட செய்ய தேவையில்லை. அதை மின்சாவாரிய அலுவலகத்தில் இருந்தபடியே தெரிந்து கொள்ள முடியும். இவையெல்லாம் ஸ்மார்ட் மீட்டர் மூலமாக கிடைக்கும் நன்மைகளாகும்.

இந்த டெண்டர் அறிவிப்புபடி, 6 தொகுப்புகளாக, 3 கோடி மின் இணைப்புகள், 4.94 லட்சம் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்கள் என, மொத்தம், 3.04 கோடி இணைப்புகளில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தி, அதை, 93 மாதங்களுக்கு பராமரிக்கும் பணிக்கு, மின் வாரியம் மீண்டும் டெண்டர் கோரியுள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் சொல்லும்போது, இந்த டெண்டரை ஆறு மாதங்களுக்குள் இறுதி செய்து, தகுதியான நிறுவனம் வாயிலாக திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வாகும் நிறுவனம் மீட்டர் பொருத்துவது, மென்பொருள் உருவாக்கம், தகவல் தொடர்பு வசதி, ஒருங்கிணைப்பது என, அனைத்து பணிகளையும், 93 மாதங்களுக்கு மேற்கொள்ள வேண்டும். இதன் திட்ட செலவு, 20,000 கோடி ரூபாயாகும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+