வில்லங்க சான்றிதழ் வேணுமா? தமிழக பதிவுத்துறை சர்ப்ரைஸ்.. என்னது மறுநாளா? இது எப்படி சாத்தியம்? சபாஷ்
சென்னை: சொத்து பத்திரங்களை பதிவு செய்யும்போது, வில்லங்க சான்றிதழ் தவிர்க்க முடியாதது.. இந்த வில்லங்க சான்றிதழில் என்ன விவரங்களை அறிந்து கொள்ள முடியும்? என்ன விவரங்களை அறிந்து கொள்ள முடியாது? தெரியுமா?
வில்லங்கம் என்பது, ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை நம்மால் முழுமையாக அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக, நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புபவர்கள் அந்த சொத்தின் முந்தைய ஓனர்கள் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், வில்லங்க சான்றிதழை பெறுவார்கள்.
அதாவது, குறிப்பிட்ட ஒரு சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழே வில்லங்க சான்றிதழாகும். சொத்து யாரிடமிருந்தது? யாரிடம் கைமாறி வந்தது? என்ற அனைத்து விவரங்கள் இவைகளில் இடம்பெற்றிருக்கும்.

பதிவுத்துறை: சுருக்கமாக சொல்லப்போனால், ஒரு சொத்தினை, பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், ஒப்பந்த தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி போன்றவை இடம் பெற்றிருக்கும்.
அதுமட்டுமல்லாமல், பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட வருடம், மற்றும் பதிவு எண் போன்றவை தெரிந்து கொள்ள முடியும். சொத்து அடமானம் வைக்கப்பட்டுள்ளதா? கடன் வாங்கப்பட்டுள்ளதா? சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதி தரப்பட்டுள்ளதா? போன்ற சகலமும் இந்த வில்லங்க சான்றிதழ் மூலம் நாம் கண்டுபிடித்துவிடலாம்.
விண்ணப்பம்: வில்லங்க சான்றிதழுக்காக, விண்ணப்பிக்கும்போது, சான்றிதழ்களை வழங்க காலதாமதம் ஆகிறது. அதனால், ஆன்லைனில் விண்ணப்பித்து சான்றிதழை பெறும் வசதியை பத்திரப்பதிவுத்துறை நமக்காக ஏற்படுத்தி தந்துள்ளது.
பதிவுத்துறையின் http://www.tnreginet.net/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று நேரடியாக தெரிந்து கொள்ளலாம். அதேபோல, வில்லங்க சான்றை பதிவிறக்கம் செய்யவும், பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வில்லங்க சான்றிதழை பார்ப்பதற்கு encumbrance certificate என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.
பதிவுத்துறை: இப்படி எத்தனையோ வசதிகள் இருந்தாலும், தற்போது கூடுதல் வசதிகளை பதிவுத்துறை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை பெரியமேடு சார் - பதிவாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இந்த புதிய வசதியை துவக்கி வைத்திருக்கிறார். இதில் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அதாவது, பத்திரப்பதிவு முடிந்த மறுநாளே, அந்த சொத்து தொடர்பான வில்லங்க விபரங்களை, இலவசமாக பார்க்கும் வகையில், புதிய வசதி துவங்கப்பட்டுள்ளது. இதுவரை, சொத்து தொடர்பான பத்திரப்பதிவு முடிந்ததும், சில நாட்கள் கழித்துதான், அதன் உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் வில்லங்க விபரங்களை அறிய முடிகிறது. ஆனால், இப்போது அப்படியில்லை.. பத்திரப்பதிவு முடிந்த மறுநாளே, வில்லங்க விபரங்களை ஆன்லைனில் ஓனர்கள் பார்த்து கொள்ளலாம்.
மெசேஜ் வந்துவிடும்: இதன்படி, பத்திரப்பதிவு செய்தவரின் செல்போன் நம்பருக்கு SMS மெசேஜ் வாயிலாக ஒரு இணையதள இணைப்புக்கான குறியீடு அனுப்பப்படும். அதன்வழியே சென்றால், தங்கள் சொத்து தொடர்பான பத்திரப்பதிவு விபரம் வில்லங்க சான்றிதழில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்பதை உரிமையாளர்கள் அறிந்து கொள்ளலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications