"சர்ப்ரைஸ்".. நீங்கதானே என்னை வீட்டுக்கு அனுப்பிட்டீங்க.. தமிழில் பேசி அசரடித்த நடிகர் சுதீப்.. வாவ்
நடிகர் சுதீப் தமிழில் பேசி அசத்திய வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகிறது
சென்னை: நடிகர் சுதீப், சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழில் பேசி அசத்திய வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது..
விக்ராந்த் ரோணா படத்தின், செய்தியாளர் சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் நடிகர் கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீத்தா அசோக் உள்ளிட்ட படகுழுவினர் கலந்து கொண்டனர்... விழாவில் செய்தியாளர்களிடம் நடிகர் கிச்சா சுதீப் பேசினார்..

வணக்கம்
ஆங்கிலத்தில் பேச்சை ஆரம்பித்தவர், பிறகு திடீரென வணக்கம் கூறி தமிழில் பேச்சை துவங்கியது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை தந்தது.. சுதீப் தமிழில் பேசியது இதுதான்: "வணக்கம்.. தமிழ்நாட்டுக்கு எப்போது நான் வந்தாலும், அதிகமாக எனக்கு மரியாதை தருகிறார்கள்.. இங்கிருந்து என்கிட்ட பேசுவீங்க.. எனக்கு வேலை தந்திருக்கீங்க.. வேலைக்கு கூப்பிட்டிருக்கீங்க.. என் வேலையை பார்த்து ரசிக்கிறீங்க.. எப்பவுமே ஒரு படத்தை எடுத்து, அதை இன்னொரு லேங்குவேஜில் ரிலீஸ் செய்ய நினைப்பதே ஒரு அழகான தருணம்தான்..

மசாலாத்தனம்
எல்லா மொழி படங்களும் எல்லா இடங்களிலும் வெளியாக வேண்டும்... சினிமா என்பது ஒரு கதை.. அந்த கதையை நாம் எல்லாருக்கும் சொல்லணும்.. எல்லாரும் அதை கேட்கணும்.. இந்த படம் ரொம்ப நல்லபடம்.. ஏதோ காசு இருப்பதற்காக எடுக்கப்பட்ட படம் இல்லை.. மசாலாத்தனத்துக்குள் நான் போகவில்லை.. காசு இருக்கு என்பதற்காக ஒரு பெரிய படம் பண்ணலாம் என்றும் இதை எடுக்கவில்லை. இந்த கதையை இன்னும் எல்லாரும் பார்க்கும்படி எப்படி செய்வது? இன்னும் ரசிக்கும்படி எப்படி செய்வது என்பது பற்றிதான் யோசித்து எடுத்துள்ளோம்" என்றார்.

நடிகர் பேட்டி
சுதீஷ் தமிழில் பேசி முடித்ததுமே, செய்தியாளர்கள், தமிழ் படத்தில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை என்று கேட்டனர்.. அதற்கு சுதீப், ஈ படத்திற்கு பிறகு ஹீரோவா இல்லை, வில்லனா என்று எனக்கே தெரியவில்லை. உங்களை வெச்சிட்டு என்ன செய்றதுன்னே தெரியவில்லை என்று பலரும் என்னிடம் குழம்பி சொன்னாங்க.. அதனால் தான் தமிழ் படங்கள் எதுவும் வரவில்லை... சரி, புலி படத்தை பார்த்துட்டு நீங்கள் தானே என்னை வீட்டுக்கு அனுப்பிட்டீங்க" என்று சிரித்து கொண்டே சொன்னார் சுதீப்... தமிழில் சுதீப் பேசிய வீடியோ இணையத்தில், ஷேர் ஆகி வருகிறது.. அவரது தமிழுக்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

காரை விற்ற நடிகர்
இது முழுக்க முழுக்க சினிமா நிகழ்வு என்றாலும், கன்னட நடிகரான சுதீஷ், இந்த அளவுக்கு தமிழ் பேசுவாரா? என்பதுதான் பலருக்கும் ஆச்சரியத்தை தந்தது.. இவர் பல கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும் ஒரு சில சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டதையும் இங்கு குறிப்பிட வேண்டி உள்ளது.. மேலும் தன்னால் முடிந்த உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். குறிப்பாக கர்நாடக மாநில விவசாயிகள் நலன் கருதி, தன்னுடைய விலை உயர்ந்த BMW காரை விற்று உதவியவர் சுதீப் ஆவார்..

வீட்டை விற்பதாக அறிவிப்பு
கர்நாடகாவில், விவசாயிகள் நலன் கருதி இயங்கும் தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியபோது, விவசாயிகள் நலனுக்காக நடத்தப்பட்டு வரும் இந்த தொண்டு நிறுவனத்திற்கு, தன்னுடைய வீட்டை கொடுப்பதாகவும் அறிவித்தார்.. சினிமா துறையில் இருந்தாலும் மிகப் பெரிய அளவில் தன்னிடம் எந்த சொத்தும் இல்லை என்று கூறிய சுதீப், தான் பயன்படுத்தி வந்த BMW எக்ஸ் 6 மாடல் காரை விற்று அதில் வரும் பணத்தைத் தருவதாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications