விஜய் வெற்றி பெற்றது அதிர்ச்சி.. ஆனாலும் மகிழ்ச்சி! திருமாவளவன் சொன்னதை பாருங்க!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் மேஜிக்கை நடத்தி காட்டியிருக்கிறது. இதன் வெற்றி குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் திருமாவளவனின் கருத்து விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் அரசியல் களத்திற்கு வந்தது முதல், கடுமையான போட்டி சூழல் உருவாகியிருந்தது. இருப்பினும் திமுக விஜய்யை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை.

மேஜிக் செய்த விஜய்
இதற்கிடையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகி பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது. திமுக மொத்தமாக 59 இடங்களில் சுருங்கியது. மறுபுறம் விஜய் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 10 இடங்கள் குறைவாக இருந்தாலும் இது மிகப்பெரிய வெற்றிதான். கட்சியின் மொத்த வாக்கு சதவிகிதம் 35% ஐ தாண்டியிருக்கிறது.
விசிக, இடதுசாரிகளின் ஆதரவு
தோல்விக்கு என்ன காரணம்? எங்கு சறுக்கினோம்? என்பது குறித்து திமுக தீவிரமாக ஆய்வு செய்ய தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளிக்க ரெடியாகி வருகின்றன. குறிப்பாக 5 தொகுதிகளில் ஜெயித்த காங்கிரஸ், தலா 2 தொகுதிகளில் ஜெயித்த விசிக, இடதுசாரிகள் விஜய்க்கு ஆதரவு அளிக்கலாம் என்று பேச்சுகள் அடிபடுகின்றன.
திருமாவளவன் திருப்தி
இந்த நிலையில்தான் விஜய்யின் வெற்றி குறித்த திருமாவளவன் விடுத்திருக்கும் அறிக்கை கவனம் பெற்றிருக்கிறது. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கணித்தபடியே தற்போது சட்டசபையில் 'தொங்குநிலை' உருவாகியுள்ளது. 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்கிற வகையில், தவெக'வுக்குத் தனிப் பெரும்பான்மையை வழங்காமல், அது தனித்து ஆட்சி அமைக்கமுடியாத நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அத்துடன், அதிமுக -பாஜக கூட்டணிக்குப் பாடம்புகட்டியுள்ள அதே வேளையில், மதசார்பற்ற சக்திகளான எமது கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை அளிக்கவில்லை.
இது எமக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தாலும், அதிமுக தலைமையிலான சாதிய- மதவாத சங் பரிவார் கூட்டணியை மக்கள் வெகுவாகப் புறக்கணித்துள்ளனர் என்பது திமுக கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
தாமரை தோல்வி
மதவழி சிறுபான்மையினருக்கும் இன்னபிற விளிம்புநிலை மக்களுக்கும் எதிரான சங் பரிவார் அரசியலைத் தமிழ் மண்ணில் வேரூன்றவிடக் கூடாது என்பதே எமது கூட்டணியின் முதன்மையான நோக்கமாக இருந்தது. அதனையே முழுமூச்சாக முன்னிறுத்தி மிகத் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டோம். அதனை ஏற்று பொதுமக்கள் அதிமுக -பாஜக கூட்டணியை வீழ்த்தி அவர்களின் சதி அரசியலை முறியடித்துள்ளனர். குறிப்பாக, 27 இடங்களில் போட்டியிட்ட பாஜகவை 26 இடங்களில் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அதேபோல 'தாமரை' சின்னத்தில் போட்டியிட்ட மற்ற கட்சியினர் அனைவருமே தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக வீழ்ச்சி
அத்துடன், கடந்த 2021 சட்டப் பேரவை தேர்தலில் 66 இடங்களில் வென்ற அதிமுக தற்போது 19 இடங்களை இழந்து நிற்கிறது. 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது அதிமுக பாஜகவுடன் கை கோர்த்து நின்றதற்காக மக்கள் அளித்துள்ள படிப்பினை ஆகும். அதிமுக தலைமையிலான பாஜக அணியின் இந்த வீழ்ச்சி, எமது முயற்சியால் விளைந்தததேயாகும்.
தவெகவுக்கு போன வாக்குகள்
இத்தேர்தலில் எமது இலக்கு தமிழ் மண்ணில் மதசார்பின்மையைப் பாதுகாப்பதே ஆகும். ஆகவே, தவெக'வை எமது எதிர்ப்பின் முதன்மை இலக்காக யாம் முன்னிறுத்தவில்லை. மாறாக, பாஜக,அதிமுக ஆகியவற்றை அம்பலப்படுத்துவதிலேயே தீவிரம் காட்டினோம். அதன்மூலம், அதிமுக -பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்கு மட்டுமின்றி தவெகவுக்கும் இயல்பாய் பிரிந்துபோனதை அறியமுடிகிறது.
வலதுசாரி அரசியல்
அதாவது, திமுக அணிக்கும் தவெகவுக்கும் மக்கள் அளித்துள்ள வாக்குகள் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை யாவும் அதிமுக தலைமையிலான சங் பரிவார் அரசியலுக்கு எதிரானவை என்பதை இத்தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் அதன் வலதுசாரி அரசியலுக்குத் துணைபோகும் கும்பலுக்கும் இடமில்லை என்பதை மிகவும் வலுவாக மீள்உறுதி செய்துள்ளது" என்று கூறியிருக்கிறார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்!












Click it and Unblock the Notifications