மகாபாரதம் காலத்திலேயே வாடகைத் தாய் முறையா? திருச்சி கோயில் சிற்பம் சொல்லும் சேதி என்ன?
சென்னை: பழங்காலத்திலேயே வாடகைத் தாய் என்ற முறை இருந்ததற்கான சான்றாக சிற்பம் ஒன்று வைரலாகி வருகிறது.
பொன், பொருள், காசு, பணம் என அனைத்திலும் சிறந்த செல்வம் குழந்தை செல்வம். அந்த குழந்தை செல்வம் பலருக்கு எளிதாக கிடைக்கிறது, சிலருக்கு தவம் இருந்தால் கிடைக்கிறது.
இன்னும் சிலருக்கோ தவம் இருந்தாலும் கிடைப்பதில்லை. இயற்கையாக குழந்தை பிறப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அவர்களுக்கு வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் நவீன முறைகள் வந்துள்ளன.

வாடகைத் தாய்
இந்த வாடகைத் தாய் முறைக்கு பல்வேறு விதிகளை மருத்துவத் துறை வகுத்துள்ளது. அதாவது இதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும் குழந்தை பெற்றுக் கொடுப்பதை உன்னதமான செயலாக்கவும் இந்த விதிகள் வழங்கப்பட்டுள்ளன. விஞ்ஞான வளர்ச்சிகேற்ப அறிவியலும் தொழில்நுட்பங்களும் வளர்ந்து வருகின்றன.

பழங்காலத்தில் புராண கதையிில்
ஆனால் பழங்காலத்திலேயே அதாவது புராண காலத்திலேயே வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் டெக்னிக் இருந்துள்ளது கோயில் சிற்பங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பிரவீன் மோகன் என்பவர் தமிழ் பால் உள்ள ஈர்ப்பாலும் வரலாறு, புராணங்கள், பாரம்பரிய வைத்தியங்கள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார்.

வாடகைத் தாய் முறை குறித்து
இந்த வாடகைத் தாய் முறை குறித்து அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் ஸ்ரீரங்கம் கோயிலில் ஒரு சிற்பத்தை பார்த்தேன். ஒரு பெண் வலது காலை தூக்கி நின்று கொண்டிருக்கிறார். ஒரு ஆண் அந்த பெண்ணின் கர்ப்பப்பையில் எதையோ வைக்க முயற்சிக்கிறார். முதலில் இந்த சிற்பத்தை பார்த்த போது அந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பதாக நினைத்தேன்.
வாடகைத் தாய் முறை குறித்து
இந்த வாடகைத் தாய் முறை குறித்து அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் ஸ்ரீரங்கம் கோயிலில் ஒரு சிற்பத்தை பார்த்தேன். ஒரு பெண் வலது காலை தூக்கி நின்று கொண்டிருக்கிறார். ஒரு ஆண் அந்த பெண்ணின் கர்ப்பப்பையில் எதையோ வைக்க முயற்சிக்கிறார். முதலில் இந்த சிற்பத்தை பார்த்த போது அந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பதாக நினைத்தேன்.

வயிறு தட்டையாக இருந்தது
ஆனால் வயிற்றை பார்த்தால் தட்டையாக இருக்கிறது. அப்படியென்றால் அந்த பெண்ணின் கர்ப்பப்பைக்கு அந்த ஆண் என்ன வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான பதில் மகாபாரதத்தில் இருக்கிறது. கிருஷ்ணருடைய அண்ணன் பலராமனின் பிறப்பில் இது சொல்லப்பட்டிருக்கிறது.

பலராமன்
அதாவது கிருஷ்ணரின் தாயின் கருப்பையில் பலராமர் வளர்ந்து வந்தார். அந்த கருவை வெளியே எடுத்து அதை வேறு ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து வளர்த்தார்கள் என சொல்லப்படுகிறது என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி அண்மையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அந்த முறை குறித்து தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications