"அந்த டப்பா எடுப்பா".. எடப்பாடியை "ஆ"வென மலைத்து பார்த்த ஓபிஎஸ்.. பக்கத்திலேயே பழனியம்மாள்.. பரவசம்
ஓபிஎஸ் தாயாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆசீர்வாதம் பெற்ற நிகழ்வை அதிமுகவினர் பூரித்து சொல்கிறார்கள்
சென்னை: தாயார் பழனியம்மாள் மறைவால் நிலைகுலைந்து போயுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.. இந்த நிலையில், 2 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை நெகிழ்ந்து பகிர்கிறார்கள் தேனி அதிமுகவினர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார்.. இவருக்கு வயது 95.. இவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ பன்னீர் செல்வத்தின் வீட்டில் வசித்து வந்தார்.
வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.. 2 நாளைக்கு முன்பு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்..

பெரியகுளம்
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியானபோது, ஓபிஎஸ் தன்னுடைய அம்மாவுடன் தேனியில் உள்ள மருத்துவமனையில்தான் இருந்தார்... அதற்குபிறகுதான் தீர்ப்பை கேள்விப்பட்டு, உடனடியாக சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார்... அம்மாவின் மறைவு செய்தி கேட்டவுடனேயே, அவசர அவசரமாக சென்னையிலிருந்து பெரியகுளம் விரைந்தார் ஓபிஎஸ்.. பெரியகுளத்தில் உள்ள வீட்டில் பழனியம்மாளின் உடல் வைக்கப்பட்டிருந்தது.. ஓபிஎஸ் வீட்டுக்குள் நுழைந்ததுமே, அம்மாவின் சடலத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்...

பரவசம் போடி
இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓபிஎஸ்ஸூக்கு ஆறுதல் கூறினார்கள்.. தன்னுடைய அம்மாவின் மீது மிகுந்த பாசத்தை கொண்டவர் ஓபிஎஸ்.. 2 வருடங்களுக்கு முன்பு, எடப்பாடி முதல்வராக இருந்தபோது, அவரை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்று, தன்னுடைய அம்மாவை அறிமுகப்படுத்தினார் ஓபிஎஸ். கடந்த 2021-ல் தேர்தல் நெருங்கி கொண்டிருந்த சமயமது.. தமிழக அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.. துணை முதல்வரான ஓபிஎஸ்ஸோ, போடி தொகுதியில் தங்க தமிழ்செல்வனை எதிர்த்து களம் காண தயாராகி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு கருத்து கணிப்பு வந்தது..

அண்ணன் ஓபிஎஸ் + அண்ணன் ஓபிஎஸ்
அதில், திமுகவுக்கு தேனி மாவட்டத்தில் பலம் அதிகமாக இருக்கும் என்று கணிப்புகள் வரவும், எடப்பாடி டென்ஷனாகிவிட்டார்.. எனவே, போடி தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ்ஸை ஆதரித்து, நேரடியாகவே பிரச்சாரம் செய்ய கிளம்பினார்.. அப்போது பிரச்சாரத்தில் மூச்சுக்கு முன்னூறு தடவை "அண்ணன் ஓபிஎஸ்.., அண்ணன் ஓபிஎஸ்.." என்று பல இடங்களில் பூரித்து சொல்லி கொண்டேயிருந்தார் எடப்பாடி.. ஓபிஎஸ் தொகுதிக்குள் செய்த பல திட்டங்கள், அறிவிப்புகள், நன்மைகளை லிஸ்ட் போட்டு சொன்னார்.. எடப்பாடியார் இப்படி சொல்ல சொல்ல, ஓபிஎஸ்ஸும் அப்படியே மலைத்து போய் எடப்பாடியை பார்த்தார்.

டப்பா எடுப்பா
பிரச்சாரம் முடிந்ததுமே, தன் வீட்டுக்கு எடப்பாடியை அன்புடன் அழைத்தார் ஓபிஎஸ். எடப்பாடியும், ஓபிஎஸ் வீட்டுக்கு அப்போது சென்றார்.. துணை முதல்வரின் மொத்த குடும்பமும் அப்போதைய முதல்வரை இன்முகத்துடன் உபசரித்து வரவேற்றது.. அப்போது, எடப்பாடியை சந்திக்க தன் அம்மாவிடம் அழைத்து சென்றார் ஓபிஎஸ்.. "யாரு வந்திருக்காருன்னு பாரும்மா.. முதல்வர் அண்ணன் வந்திருக்காரு" என்று ஓபிஎஸ் சொல்லவும், எடப்பாடியார், ஓபிஎஸ் அம்மாவின் அருகில் சென்று, டக்கென அவரது கையையும் இறுக பற்றி கொண்டார். அப்போது உணர்ச்சிப்பெருக்கில், எடப்பாடியை வாழ்த்தியவர், "அந்த டப்பா எடுப்பா" என்றார் பழனியம்மாள்.. பிறகு அவரிடம் ஒரு விபூதி டப்பா தரப்பட்டுள்ளது..

விபூதி பூசினார்
அதை வாங்கிய அம்மா, அதில் இருந்து விபூதி எடுத்து, எடப்பாடியின் நெற்றியில் பூசி ஆசீர்வதித்தார். உடனே அருகிலிருந்த ஓபிஎஸ்ஸும் பவ்யமாக தலைகுனிய, அவருக்கும் திருநீறு பூசிவிட்டார் பழனியம்மாள்.. விபூதி பூசிவிட்டதுமே, எடப்பாடி பழனிசாமி, அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.. அப்போது, அவரது கண்கள் மட்டுமல்ல, சுற்றியிருந்த அனைவரின் கண்களும் அப்போது கலங்கி விட்டன... இதில் ஹைலைட் என்னவென்றால், இப்படி ஒரு சம்பவம் நடந்தபோதே, இரட்டை தலைமை விவகாரம் தலைதூக்கிவிட்டது.. அப்போதைய முதல்வர் வேட்பாளர் யார் விவகாரமும் வெடித்தது..

ரத்தத்தன் ரத்தங்கள்
உட்கட்சி பூசல், தனிஆளுமை, சசிகலாவுக்கு மறைமுக ஆதரவு, இப்படி எத்தனையோ செய்திகள் ஓபிஎஸ் பற்றி வலம்வந்து கொண்டுதான் இருந்தன.. இவ்வளவு பூசல்கள் வலம்வந்தநிலையில், ஓபிஎஸ் வீட்டுக்கே எடப்பாடி சென்றதும், அவரது அம்மாவிடம் தலைதாழ்த்தி விபூதி பூசிக்கொண்டதும் மிகுந்த நெகிழ்ச்சியுடன் அப்போது அதிமுகவின் தொண்டர்களால் பார்க்கப்பட்டது.. இன்றைய தினம் இந்த இரு தலைவர்களின் இடைவெளியை நினைத்து ரத்தத்தின் ரத்தங்கள் என்னசெய்வதென்றே தெரியாமல் விழித்து கிடக்கிறார்கள்.. கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.. எனினும் தேனியில் அன்று விபூதி பூசி வாழ்த்தியதையும் நினைவுகூர்ந்து வருகிறார்கள்..!!

பாசக்கார பழனியம்மா
ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்..ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். அதேபோல, தன்னுடைய பழைய நண்பர் என்று அடிக்கடி சொல்லி கொள்ளும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வரும்நிலையில், எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் தெரிவிப்பாரா? என்று எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் எழுந்துவருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications