"புலி சாதம்".. அந்தம்மா கூப்பிட்டதுமே.. டக்குனு திரும்பி பார்த்த மாலா + தேவா.. வாயை பிளந்த வண்டலூர்
சென்னை: வண்டலூர் முழுக்க மாலா, தேவா என்றால் அவ்வளவு ஃபேமஸாம்.. என்ன காரணம்? ஆச்சரியத்தை கிளப்பும் மாலா + தேவா யார் இவர்கள்?
இப்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் பயணிகள் வருகை அதிகமாகி கொண்டே போகிறது.. அதற்கேற்றவாறு, மீண்டும் வண்டலூர் பூங்காவில் 'சிங்கம் சபாரி' திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 2 வருடங்குளுக்கு முன்பு மூடப்பட்ட 'சிங்கம் சபாரி' திட்டத்தை மறுபடியும் தொடங்குவதற்கு பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. இதன் காரணமாக மூடப்பட்ட 'சிங்கம் சபாரி' பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக்கம்பி வேலிகள் உறுதித்தன்மையோடு இருப்பதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஜில் ஜில் பறவை: அதன் இருப்பிடங்களில் சில சிங்கங்கள் விடப்பட்டு, பேட்டரி வாகனத்தில் சென்று நேரடியாக அவற்றை பார்ப்பது போல் சோதனை ஓட்டங்களும் நடக்க போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. மேலும், சிங்கத்தின் உலாவிடங்களுக்கு நேரடியாக பொதுமக்கள் சென்று பார்ப்பதற்காக புதிய பேட்டரி வாகனங்கள் வாங்குவதற்கு பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்..
அதேபோல, தற்போது, கோடை காலம் என்பதால், இங்குள்ள உயிரினங்களும் ஜில்லென்ற சூழலில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் பறவைகளை பொறுத்தவரை, அவைகள் உள்ள கூண்டுகள் கோணி மூலம் போர்த்தப்பட்டு, அந்த கோணிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகின்றன..
மேலும், கூண்டுகளுக்கு மேல் தென்னை, பனை ஓலைகள் போடப்பட்டிருக்கின்றன. நீர்ச்சத்து உள்ள பழங்கள் இந்த பறவைகளுக்கு வழங்கப்படுகின்றன.. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால், குளுகுளுவென சூழலில் பறவைகள் கூண்டுக்குள் உள்ளன..
சிங்கம் புலிகள்: விலங்குகளுக்கும் இதுபோலவே, குளிர்ச்சியான சூழல் செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன... யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு ஸ்பெஷலாக ஷவர்களில் அமைக்கப்பட்டுள்ளதால், அவைகள் இங்கு குஷியில் குளியல் போடுகின்றன. சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு ஏசியில் வைக்கப்பட்ட இறைச்சி ஜில்லென்று தரப்படுகிறதாம்.. இதைதவிர, 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கால்நடை டாக்டர்கள் இந்த விலங்குகளை கண்காணித்தபடியே இருக்கிறார்கள்
ஹைலைட்: இதில் ஹைலைட் என்னவென்றால், வண்டலூர் பூங்காவில் 2 புலிகள் இருக்கிறதாம்.. அந்த புலிகள் பெயர் தேவா மற்றும் மாலா.. இந்த புலிகள் ஹாயாக அங்கே சுற்றி திரிகிறதாம்.. கூண்டுக்கு வெளியே திரிந்தாலும், யாருக்கும் தொந்தரவு தருவதில்லையாம்.. பெண் ஊழியர் அங்கு வந்து, கூண்டுக்குள் போக சொன்னால், உடனே மாலாவும், தேவாவும் சமர்த்தாக எழுந்து நடந்து கூண்டுக்குள் போய்விடுகிறார்களாம்..
அந்த புலிகளை பெண் ஊழியர் தேவா, மாலா என்று சொல்லியே அழைக்கிறார். அவர் அப்படி கூப்பிட்டதுமே, அந்த புலிகள் திரும்பி, அந்த பெண் ஊழியரை பார்க்கின்றதாம்.. இதையெல்லாம் பார்த்து சுற்றுலா பயணிகள் பூரித்து போகிறார்கள்.. மாலாவும் தேவாவும்தான் வண்டலூரை இப்போது கலக்கி கொண்டிருக்கிறார்கள்..!!
புலி சாதம்: சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநில கிராமம் ஒன்றில், கரண்ட் வேலியை அமைத்ததில், புலி ஒன்று அதில் சிக்கி இறந்துவிட்டது.. இறந்த புலியை அப்படியே காட்டுக்குள் கொண்டுவந்து வைத்து, வெட்டி சிலர் சமைத்துள்ளனர்.. அதற்கு பிறகு, ஊருக்குள் கொண்டுவந்து, கிராம மக்கள் எல்லாருக்குமே புலிக்கறியை தந்துள்ளனர். விஷயம் தெரிந்து போலீஸ் வந்தால், அவர்களையும் விரட்டி அடித்துள்ளனர்.. இப்படி பல புலிகளை வேட்டையாடி, புலிகளின் இனமே அழிந்து வரும் நிலையில், இந்த புலிகள் மனிதர்களுடன் நெருக்கமாகி கொண்டிருப்பது ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications