பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஸ்விகி, சொமேட்டோ டெலிவரி ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு!
சென்னை: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வுக்கு ஏற்றாற்போல ஊதியத்தை உயர்த்த கோரியும் நாடு முழுவதும் ஸ்விகி, சொமேட்டோ டெலிவரி ஊழியர்களை போன்ற கிக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றனர்.
இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும். வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் சர்வீசஸ் தொழிலாளர்கள் சங்கம் (GIPSWU) வலியுறுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நீண்ட நேரம் வேலை செய்தும் கூட, போதிய வருமானம் இல்லை என்று கிக் தொழிலாளர்கள் கூறுகின்றனர். சமூக வலைத்தளமான X தளத்தில் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பதிவில்,
“அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் போதுமான ஊதியம் இல்லாததை கண்டித்து, இந்தியா முழுவதும் உள்ள கிக் மற்றும் பிளாட்பார்ட் தொழிலாளர்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை ஆப் சார்ந்த சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு சுமார் ₹3 எரிபொருள் விலையை உயர்த்தியதன் பின்னணியில் இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.90க்கும், டீசல் லிட்டர் ரூ.95.47க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டாக்ஸி டிரைவர்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பல ஓட்டுநர்கள், எரிபொருள் செலவு தங்கள் வருவாயின் பெரும் பங்கை எடுத்துக்கொள்வதாகவும், ஆப் நிறுவனங்கள் அதிகரிக்கும் செலவுகளுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications