இரண்டாண்டு சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம்.. சைலேந்திரபாபு உருக்கமான கடிதம்!
சென்னை: இன்று ஓய்வு பெறும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு போலீசாருக்கு நன்றி தெரிவித்து உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். தான் டிஜிபியாக பதவி வகித்த காலத்தில் செய்த முயற்சிகளையும் நினைவுகூர்ந்துள்ளார் சைலேந்திரபாபு.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றிவந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். பணிஓய்வு பெறும் டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் அழைத்து, அவருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சைலேந்திர பாபு: டி.ஜி.பி சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் பிறந்தவர். இவர் 1987ஆம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சைலேந்திர பாபு எம்எஸ்சி விவசாயம், எம்பிஏ, பிஎச்டி உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர். சைபர்கிரைம் ஆய்வுப் படிப்பையும் முடித்துள்ளார்.
தனது 25 ஆவது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக தமிழ்நாட்டில் காவல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்பியாக கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை அடையாறு துணை ஆணையர் ஆகிய முக்கியப் பொறுப்புகளில் பணிபுரிந்தார். சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக இருந்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவை மாநகர காவல்துறை ஆணையராக சைலேந்திர பாபு பணியாற்றிய போது, பள்ளிச் சிறுவர்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹீரோ: அதன் பிறகு சைலேந்திரபாபு வடக்கு மண்டல ஐஜியாக பதவியேற்றார். அதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அவரை தேடி வந்தது. அங்கும் அவரது பணி பாராட்டுகளைப் பெற்றது. 2015 பெருவெள்ளத்தின்போது வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு நீந்தியே சென்று வீட்டுக்குள் சிக்கிய பலரை சைலேந்திரபாபு மீட்டார்.
பின்பு அவர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, ரயில்வே காவல்துறை டிஜிபியாக பதவியில் இருந்தார். அதன் பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வரான பிறகு ஜூன் மாதம் டிஜிபியாக பொறுப்பேற்ற சைலேந்திரபாபு தமிழ்நாட்டில் குற்றங்களை தடுக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
மாரத்தான் ஓட்டப்பந்தயம், சைக்கிள் ஓட்டும் பயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றில் பெரும் ஆர்வம் கொண்டவர் சைலேந்திரபாபு. தமிழ்நாடு முழுக்க சைக்கிள் பயணங்களை மேற்கொண்டுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக சைபர் குற்ற விழிப்புணர்வு, சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வு, மன வள ஆலோசனை, உடற்பயிற்சி டிப்ஸ் வழங்கி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
ஓய்வு பெறும் சைலேந்திர பாபு: இந்நிலையில், இன்று ஓய்வு பெறும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நன்றி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன், பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்; பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார் சைலேந்திர பாபு.
சைலேந்திர பாபு எழுதியுள்ள கடிதத்தில், "30.06.2021 அன்று தமிழ்நாடு காவல்துறையின் தலைமைப் பொறுப்பு ஏற்றுக்கொண்டேன். இன்று பணி நிறைவு பெற்று உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். இரண்டாண்டு சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம், காலம் குற்ற நிகழ்வுகளை தடுத்தோம், நடந்த குற்றங்களைக் கண்டுபிடித்தோம். கண்டுபிடிக்க முடியாத சில வழக்குகளில் இன்னும் தீவிர விசாரணை செய்கிறோம், ஆனால், தவறாக ஒருவரை குற்றவாளியாக்கவில்லை. அதுபோல குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட்டு விடவில்லை.
தேவர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற வழக்கமான சட்டம் & ஒழுங்கு நிகழ்வுகள் சுமூகமாக கடத்திச் சென்றோம். ஜனாதிபதி, பிரதமர் வருகைக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தோம். தமிழ்நாட்டில் சாதி சண்டை இல்லை: மதக் கலவரம் இல்லை. ரயில் கொள்ளை, வங்கிக் கொள்ளை இல்லை, துப்பாக்கி கலாச்சாரம் இல்லை. பிற மாநில கொள்ளையர்கள் அட்டகாசம் இல்லை; உள்ளூர் ரவுடிகள் தொல்லை இல்லை: கூலிப்படைகள் நடமாட்டம் இல்லை என்ற நிலைமையை உருவாக்கினோம்.

உருக்கமான கடிதம்: இவை அனைத்தும் உங்கள் முயற்சியால் ஏற்பட்டது. எனவே, உங்களுக்கு பாராட்டுகள்: உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் 3 இலட்சம் குற்ற வழக்குகள், 6 இலட்சம் சிறு வழக்குகள், 18 இலட்சம் இதர மனுக்கள் விசாரிக்கப்பட்டன. மோட்டார் வாகன சட்டத்தில் 5 கோடியே முப்பதாயிரம் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 536 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவை பெரும் பணியாகும்.
காவலர்களுக்கு 5 நாள்கள் பணி, ஆறாவதுநாள் மிகை நேர ஊதியம், ஏழாவது நாள் ஓய்வு என சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இரவு ரோந்துப்படி ரூ.300/- முதல் முறையாக அமலானது. காவலர் குடியிருப்பு அளவு 750 சதர அடி என உயர்ந்தது. மகளிர் காவலர்களின் வருகை 7 மணி என்பது 8 மணி என மாறியது; எரிபொருள் படி உயர்த்தப்பட்டது. காவலர் வாரிசுகளுக்கு பணி இட ஒதுக்கீடு பத்து சதம் மீட்கப்பட்டது, 1340 மறைந்த காவலர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நிலைய வரவேற்பு அதிகாரி வேலை, 1600 வாரிசுகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டது.
4000 சிறு தண்டனைகளைக் களைந்து, காவலர் நலன் காக்கப்பட்டது. 12:173 காவலர்களை எனது அலுவலகத்தில் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டேன். 2,400 காவலர்களை எனது பயணத்தின் போது சந்தித்து குறைகளைக் கேட்டேன். துறை நமக்கு செய்தது போல், நாமும் துறைக்கு கைம்மாறு செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பை நான் பணி ஓய்வு பெறும் இந்நாளில் உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்.
பொதுமக்களிடம் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன். தலைமைப் பண்பு வளர்க்க உடல் நலம், மனநலம் காக்க வேண்டும். தொடர் கல்வி கற்க வேண்டும். ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அளவோடு உணவு உண்ண வேண்டும் காவல் துறையின் 134,000 பேரும் ஓர் ஆளுமை என்ற நிலை வரவேண்டும்.
போலீசாருக்கு நன்றி: அப்போது நம் செயல் சிறப்படையும், காவல் துறையின் செயல்பாட்டில் விரும்பத்தக்க மாற்றம் ஏற்படும். வதந்திகளைக் கையாண்டது, ரவுடிகளின் கொட்டத்தை அடக்கியது; கூலிப்படையினரை காணாமல் போகச் செய்தது, போதைப்பொருள் நடமாட்டத்தை குறைத்தது. தொழில்நுட்பத்தில் ஏற்படுத்திய புரட்சி போன்ற உங்கள் சாதனைகளைப் பார்த்துநான் வியப்படைகிறேன்.
இங்கொன்றும் அங்கொன்றும் நடந்தேறிய அசம்பாவிதங்களை நீங்கள் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. பிரச்சனைகளை நீங்கள் வளரவிடவில்லை. பொதுமக்கள் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள் நிவர்த்தி செய்து, அவர்களின் மனதில் இடம் பிடிப்பது நமது இலட்சியமாக இருக்க வேண்டும். நம்மைப்பற்றிய விமர்சனம் பல வரும்.
இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும், ஆனால், நிறைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து பார்த்து, அவற்றின் உண்மைத்தன்மையை கண்டறிந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அதை எடுத்துக் கொண்டு, நாம் சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம். உங்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications