இன்று தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்.. தீபாவளியையொட்டி தெற்கு ரயில்வே அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று ஏசி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் நாளை நாகர்கோவிலில் இருந்து மீண்டும் சென்னைக்கு வர உள்ளது.


தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். வெளியூரில் தங்கி வேலை செய்து வருவோர் தங்களின் சொந்த ஊர்களை நோக்கி புறப்பட்டு சென்று வருகின்றனர்.

special train nagercoil

குறிப்பாக இருந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி வருகின்றனர். இதனால் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

மக்கள் அதிகமாக ஊர்களுக்கு செல்வதால் தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் என்பது பலமடங்கு அதிகரித்துள்ளது. அதோடு விமானங்களிலும் டிக்கெட் விலை என்பது உயர்ந்துள்ளது. இதற்கிடையே தான் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் என்பது இயக்கப்பட உள்ளது. அதன்படி தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 3.45 மணிக்கு ஏசி சிறப்பு ரயில் (வண்டி எண் 06109) புறப்பட்டு நாளை அதிகாலை 4.40 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைய உள்ளது.

அதேபோல் மறுமார்க்கமாக நாளை நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் புறப்பட உள்ளது. அதாவது நாகர்கோவிலில் இருந்து நாளை காலை 8.45 மணிக்கு புறப்படும் ஏசி சிறப்பு ரயில் (06110) இரவு 9.55 மணிக்கு தாம்பரத்தை அடைய உள்ளது.

இந்த ரயில்களில் ஏசி மூன்றடுக்கு பெட்டிகள் 14, லக்கேஜ் கம் பிரேக் வேன்ஸ் 2 என மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். இந்த ரயில்கள் இருமார்க்கமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருமங்கம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+