நாகர்கோவில் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு.. அந்தியோதயா உட்பட தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்!
சென்னை: தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் அந்தியோதயா ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து தென்னக ரயில்வே அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
தினமும் சென்னையிலிருந்து தென் மாவட்டமான கன்னியாகுமரிக்கு 4 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

KANYAKUMARI EXP (12633) - சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில்
MS GURUVAYUR EXP (16127) - தாம்பரத்திலிருந்து நாகர்கோவில்
ANANTAPURI EXP (20635) - சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில்
MS NCJ VB EXP (20627) - சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் சந்திப்பிற்கு திங்கள் தவிர மற்ற நாட்களில் (வாரத்திற்கு 6 நாட்கள்) இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இது.
இந்த ரயில்கள் தவிர, வாராந்திர சிறப்பு ரயில்கள் அல்லது குறிப்பிட்ட நாட்களில் மட்டும் இயக்கப்படும் ரயில்கள் பல உள்ளன. அதில் முக்கியமான ரயில்தான் அந்தியோதயா விரைவு ரயில். இது முழுக்க முன்பதிவில்லா பெட்டிகளை கொண்டிருக்கிறது. தினமும் இரவு 10.40 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை என டெல்டா மாவட்டங்கள் வழியாக திருச்சி, மதுரை என பயணித்து நாகர்கோவில் சென்று சேர்கிறது.
இந்த அந்தியோதயா விரைவு ரயில்(20691), வருகிற ஜூன் 22 முதல் ஜூலை 22 வரை அதாவது ஒரு மாத காலத்திற்கு நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். என தென்னக ரயில்வே தெரிவித்திருக்கிறது.
அதேபோல நாகர்கோவிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில்(20692) வருகிற ஜூன் 23 முதல் ஜூலை 22 வரை நெல்லையில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்படும். இதன் மூலம் நெல்லை - நாகர்கோவில் இடையே ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல நாகர்கோவில் ரயில்கள், கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் 'தாம்பரம் - நாகர்கோவில்' அதிவிரைவு ரயில்(22657) வருகிற ஜூன் 22 முதல் ஜூலை 21 வரை கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்படும் ரயில் நாகர்கோவிலில் காலை 6.45 மணிக்கு செல்லும். பின்னர் 6.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு 7.25 மணிக்கு சென்றடையும்.
மறுவழியில் இதே ரயில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 4.35 மணிக்குப் புறப்படும். ஜூன் 23 முதல் ஜூலை 22 வரை இந்த நடைமுறை தொடரும். இதேபோன்று தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் மற்றொரு வாராந்திர ரயில் (12667) ஜூன் 26 முதல் ஜூலை 17 வரை கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகிறது.
மறுவழியில் நாகர்கோவிலுக்குப் பதிலாக கன்னியாகுமரியில் இருந்து புறப்படும். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் நாகர்கோவில் ரயிலும்(12689) ஜூன் 27 முதல் ஜூலை 18 வரை கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகிறது. மறுவழியில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்" என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications