சென்னை போவது ஈஸி.. திருநெல்வேலி, கன்னியாகுமரி மக்களுக்கு குட்நியூஸ்.. தெற்கு ரயில்வே அதிரடி
சென்னை: நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில், நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரம் புறப்படுகிறது. இதேபோல் தாம்பரததில் இருந்து திங்கள்கிழமை நாகர்கோவிலுக்கு புறப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை டூ கன்னியாகுமரி பகுதிக்கு எத்தனை ரயில்கள் விட்டாலும் நிச்சயம் போதாது. தென்மாவட்ட மக்கள் அதிக அளவு சென்னையில் வசிப்பதால், சொந்த ஊருக்கு செல்ல அடிக்கடி திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி செல்கிறார்கள். சென்னையில் இருந்து கிளம்பும் ரயில் திண்டுக்கலை தாண்டிதான் மூச்சுக்கூட விடும். அந்த அளவிற்கு ரயிலில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

தற்போது சென்னை முதல் மதுரை வரை இரட்டை ரயில் பாதை உள்ளதால், இந்த பாதையில் எத்தனை ரயில்களையும் சிறப்பு ரயில்களாக தெற்கு ரயில்வேயால் அறிவிக்க முடியும். ஆனால் மதுரை டூ நாகர்கோவில் பகுதியில் பணிகள் இன்னமும் முழுமையாக முடியவில்லை. இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்து, ரயில்கள் இயங்க தொடங்கினால் நிரந்தரமாககூடுதல் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் வார இறுதி கூட்ட நெரிசலை சமாளிக்க அடிக்கடி திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில் நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06012) நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் செப்டம்பர் 17, 24 ஆகிய தேதிகளில் இயக் கப்படுகிறது.
மறுமார்க்கமாக தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06011) தாம் பரத்திலிருந்து திங்கள்கிழமை காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
இதேபோல் செப்டம்பர் 18, 25 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருது நகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ரயில் நிலை யங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயிலுக்கான முன் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிவிட்டது.
இந்த நாகர்கோவில் தாம்பரம் ரயிலில் ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி, 5 மூன்றடுக்கு ஏசி பெட்டி, 11 ஸ்லீப்பர் பெட்டிகள், இரண்டு பொது பெட்டிகள், இரண்டு மாற்றுத் திறனாளி பெட்டிகள் இடம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications