10ம் வகுப்பு ஃபெயிலா? கவலைய விடுங்க துணைதேர்வு தேதிகள் அறிவிப்பு.. மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத/ வருகை புரியாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவ-மாணவிகள் துணைத்தேர்வுக்கு மே 16ம் தேதி முதல் ஜுலை 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு ஜுலை 2ம் தேதி முதல் ஜுலை 8 ம் தேதி வரை பாடவாரியாக தேர்வுகள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் 8 ம்தேதி முடிவடைந்தது. முறைகேடுகள் ஏதுமின்றி அமைதியாக இந்த தேர்வுகள் நடந்து முடிந்தன

10ம் வகுப்பு பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதினர். இதில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 பேர் மாணவிகள். 4 லட்சத்து 47 ஆயிரத்த 2013 பேர் மாணவர்கள்.
நேற்றைய தினம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சியடைந்தனர். இது 91.55 சதவீத தேர்ச்சியாகும். மாணவிகளை பொறுத்தமட்டில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 பேர் (94.53 சதவீதம்) தேர்ச்சியடைந்தனர். மாணவிகளை பொறுத்தமட்டில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேர் (88.58 சதவீதம்) தேர்ச்சியடைந்தனர். மாணவர்களை விட மாணவிகள் 5.95 சதவீதம் தேர்ச்சியடைந்தனர்.
இதில் தேர்ச்சியடையாத மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் மாணவ-மாணவிகளுக்கான துணைத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மற்றும் வருகை புரியாத மாணவர்கள் துணைத்தேர்வுக்கு வரும் 16ம் தேதி முதல் ஜுலை 1ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்

அதன்பிறகு 10ம் வகுப்பு துணைத்தேர்வுகள் ஜுலை 2ம் தேதி தொடங்கி ஜுலை 8 ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி ஜுலை 2ம் தேதி முதல் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் தேர்வு நடக்கும். ஜுலை 3ம் தேதி ஆங்கிலம் பாடத்துக்கான தேர்வு நடைபெறும். ஜுலை 4ம் தேதி கணித பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது.
மேலும் ஜுலை 5ம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வும், ஜுலை 6ம் தேதி விருப்ப மொழிப்பாடத்துக்கான தேர்வும், ஜுலை 8 சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வும் நடைபெற உள்ளது என அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications