Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் பாசிட்டிவ் மாற்றம்.. குறைந்தது கொரோனா.. இன்றைய மாநில நிலவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் செப்டம்பர் 25ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 1694 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1658 பேர் ஒரே நாளில் மீண்டனர். பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 1600 என்கிற நிலையில் உள்ளது. கோவை, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாதிப்பு பெரிய அளவில் மாறவில்லை. இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் படிப்படியாக கொரோனா உயர தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 26ம் தேதியான இன்று கொரோனா தொற்றால் 1,694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 26,57,266 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

அதேநேரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,658 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26,04,491 ஆக உயர்ந்துள்ளது.

 உயிரிழப்பு எவ்வளவு

உயிரிழப்பு எவ்வளவு

தமிழகத்தில் கொரோனா காரணமாக செப்டம்பர் 26 ம் தேதி மாலை நிலவரப்படி 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35,490 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது

சரிந்தது

தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17 ஆயிரத்திற்கு உயர்ந்துள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 17,196 ஆக இருந்த நிலையில் இன்று 17,285 ஆக உயர்ந்துள்ளது. தினசரி இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயருவது கவலையை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆக்டிவ் நோயாளிகள் (சிகிச்சை பெறும் நோயாளிகள்) எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கோவையில் அதிகம்

கோவையில் அதிகம்

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவையில் 196 பேரும், சென்னையில் 190 பேரும், செங்கல்பட்டில் 118 பேரும், ஈரோட்டில் 118 பேரும், திருப்பூரில் 86 பேரும், சேலத்தில் 68 பேரும், திருவள்ளூரில் 74 பேரும், தஞ்சாவூரில் 77 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் சென்னையில் அதிகமாக (2087) உள்ளது. கோவையில் 2077 பேரும், ஈரோட்டில் 1240 பேரும், செங்கல்பட்டில் 1143 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+